பாதுகாப்பான தீபாவளி.. பட்டாசு வெடிக்கும் போது கவனம்.. மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க பலருக்கும் ஆசைதான். சின்ன பாம்பு வெடி முதல் மிகப்பெரிய அணுகுண்டு வெடிப்பது வரை ஆசை ஆசையாக பட்டாசு வெடிப்பார்கள். காசை இப்படி கரியாக்கலாமா என்று பலரும் கேட்கலாம். ஆனால் பட்டாசு வாங்கி வெடித்தால்தான் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பலரது வீடுகளில் பண்டிகையே கொண்டாட முடியும்.

பாதுகாப்பாக எப்படி பட்டாசு வெடிக்க வேண்டும். விபத்தில்லாத தீபாவளியை எப்படி கொண்டாடலாம் என தமிழக அரசும் காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் அறிவுறுத்தியுள்ளனர்.

Deepavali: Dos and Donts for a Safe Diwali Firecracker Burst

பட்டாசுகள்: பண்டிகை நாட்களில் மொத்தமாக பட்டாசுகளை வாங்கி குவித்து வைத்து வெடிப்பார்கள். தெரிந்தோ தெரியாமலோ தீப்பொறிகள் பட்டு தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பட்டாசுகளை மொத்தமாக ஓரிடத்தில் வைத்து வெடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆபத்தான விளையாட்டு: அதே போல வெடிக்கும் பட்டாசுகளை கைகளில் பிடித்து தூக்கிப்போட்டு ஸ்டைலாக வெடிப்பார்கள். அது தவறான செயல். கைகளில் வெடித்து காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தூக்கிப்போடும் வெடி யார் மீதாவது பட்டு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதே போல பாட்டில்கள் கண்ணாடி பொருட்களில் பட்டாசுகளை வைத்து வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்டாசு வெடிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டியவை : குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அங்கிகரிக்கப்பட்ட உரிமையாளர்களிடம் இருந்து மட்டுமே பட்டாசுகளை வாங்க வேண்டும். திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்கும் போது சுற்றுப்புரத்தில் எரியக்கூடிய அல்லது எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

முதலுதவி பெட்டி: பட்டாசுகளை மூடிய கொள்கலனில் சேமித்து வைக்கும்போது சுற்றுப்புரத்தில் எரியக்கூடிய அல்லது எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். தீக்காய்களிம்புகள், வாளி நிறைய தண்ணீர் மற்றும் தீயை அணைக்கும் கருவிகளை முதலுதவிக்கு வைத்திருக்க வேண்டும். தீப்பிடிக்காமல் இருக்க பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மருத்துவ முதலுதவி பெட்டிகளை அருகில் வைத்திருக்க வேண்டும். மருத்துவ அவசர உதவிக்கு எண் 108 அழைக்கவும்.

கண்காணிப்பு அவசியம்: குழந்தைகள் பெற்றோர்களில் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும். காதுகளின் சேதத்தை தவிர்க்க உங்கள் காதுகளில் பருத்தி செருகிகளை வைக்கவும். வீட்டு கூரையின் மேற்புரத்தில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் அகற்றப்பட்டாதா என்பதை உறுதி செய்யவும். பட்டாசு கொளுத்தும்போது காலணிகளை அணிய வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை : பட்டாசுகளை கையில் வைத்து வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மெழுகுவர்த்திகள் எரியும் இடத்தில் பட்டாசுகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. பாதி எரிந்த பட்டாசுகளை ஒருபோதும் வீசாதீர்கள். அவை எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களின் மீது விழுந்தால் தீப்பற்ற கூடிய அபாயம் உள்ளது. வெடிக்காத பட்டாசுகளை கைகளில் எடுத்து ஊதக்கூடாது.

பாதுகாப்பான தீபாவளி: வாகனங்களுக்கு அருகில் பட்டசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகள் வெடிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால், அவற்றை சேதப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள்ளும் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுடன் கூடிய பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். பட்டாசு கழிவுகளை வீடுகளில் உள்ள ஈரமான அல்லது உலர் கழிவுகளுடன் சேர்க்க வேண்டும். பாதுகாப்பாண தீபாவளி பண்டிகையை கொண்டாட, பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+