மகா கும்பமேளாவில் பங்கேற்ற 1,000 இந்துக்களை காணவில்லை.. அணுகுண்டு வீசும் சமாஜ்வாதி அகிலேஷ் யாதவ்!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட 1,000-க்கும் அதிகமான இந்துக்களை காணவில்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் மகா கும்பமேளா குறித்து பெருமிதமாக பிரதமர் நரேந்திர மோடி பேசிய நிலையில் அகிலேஷ் யாதவ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மகா கும்பமேளா குறித்து அகிலேஷ் யாதவ் கூறியதாவது: மகா கும்பமேளா, கும்பமேளாவை நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் நினைவு கூறுகிறோம். அதேநேரத்தில் மகா கும்பமேளாவுக்காக மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்பதுதான் மிகப் பெரிய கேள்வியாகும்.

உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் முதல்வர்கள், வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை மட்டுமே செய்தனர். எல்லைகளைத் தாண்டி பொதுமக்கள அனுமதிக்கப்படவில்லை.
மகா கும்பமேளாவில் பங்கேற்ற நிலையில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருவதற்கு பாஜகவும் அதன் பரிவாரங்களும் குறைந்தபட்ச உதவியையாவது செய்ய வேண்டும். மகா கும்பமேளாவில் பங்கேற்றவர்களில் 1,000-க்கும் அதிகமான இந்துக்கள் காணவில்லை என கூறப்படுகிறது. இந்த தகவலை காணாமல் போனவர்களின் குடும்பத்துக்கு உத்தரப்பிரதேச அரசு தெரிவிக்க வேண்டும்.
மகா கும்பமேளா நடந்த பிரயாக்ராஜ் பகுதிகளில் இப்போதும் காணவில்லை என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களை அகற்றும் பணியில் உத்தரப்பிரதேச பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இப்படி காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க குறைந்தபட்ச முயற்சிகளையாவது பாஜக அரசு மேற்கொள்ள வேண்டும்.
உத்தரப்பிரதேச, மத்திய பிரதேச மாநிலங்களின் முதல்வர்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. கும்பமேளாவுக்கான முறையான ஏற்பாடுகளை செய்யாததால் பொதுமக்களை பெரும் எண்ணிக்கையில் அனுமதிக்கவும் இல்லை. இந்த கும்பமேளாவுக்கு மத்திய அரசு எவ்வளவுதான் நிதி கொடுத்தது? இதை உத்தரப்பிரதேச மாநில அரசு பகிரங்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியது என்ன?
Submit
பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav
மகா கும்பமேளா வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு மக்களவையில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை
மகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்த உதவிய மக்களுக்கு தலைவணங்குகிறேன்: பிரதமர்
மகா கும்பமேளாவின் வெற்றிக்குப் பலரும் பங்களித்துள்ளனர். அரசு, சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து கர்மயோகிகளையும் பாராட்டுகிறேன்: பிரதமர்
மகா கும்பமேளாவை நடத்துவதில் 'மாபெரும் முயற்சிகள்' மேற்கொள்ளப்பட்டன: பிரதமர்
இந்த மகா கும்பமேளா நிகழ்வு மக்களால் வழிநடத்தப்பட்டதுடன் அவர்களது மனஉறுதி மற்றும் தளராத பக்தியால் உத்வேகம் பெற்றது: பிரதமர்
பிரயாக்ராஜில் நடைபெற்ற நாட்டின் ஆத்மாவைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த மகா கும்பமேளா குறிப்பிடத்தக்க சாதனையாகும்: பிரதமர்
மகா கும்பமேளா ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தியுள்ளது:பிரதமர்
நாடாளுமன்றத்தில் மகா கும்பமேளா குறித்து பெருமிதத்தை வெளிப்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் மகா கும்பமேளாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு தேவைப்படும் அளப்பரிய முயற்சிகளை சுட்டிக் காட்டிய நரேந்திர மோடி, மகா கும்பமேளா மக்களின் ஒருங்கிணைந்த உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றின் வெளிப்பாடாக அமைந்துள்ளது என்றார்.
மகா கும்பமேளாவின் போது காணப்பட்ட தேசிய உணர்வு குறித்த பிரக்ஞையைச் சுட்டிக் காட்டிய பிரதமர், இந்தப் பிரக்ஞை புதிய தீர்மானங்களை நோக்கி நாட்டை செலுத்துவதோடு அவற்றை நிறைவேற்றுவதற்கு உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது எனவும் எடுத்துரைத்தார். நாட்டின் திறன்கள் குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்கள், அச்சங்களுக்கு மகா கும்பமேளா நிகழ்வு சிறந்த தீர்வை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நீண்ட பயணத்தை எடுத்துரைத்த திரு மோடி, கடந்த ஆண்டு அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பிராண பிரதிஷ்டா விழாவுக்கும், இந்த ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்வுகள் அடுத்த நூற்றாண்டை எதிர்கொள்வதற்கு நாடு தயாராக உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் ஒற்றுமை உணர்வு அதன் அளப்பரிய ஆற்றலை பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார். மனித வரலாற்றைப் போலவே, நாட்டின் சரித்திரத்திலும் முக்கிய தருணங்கள் நிகழும் என்பதை எதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல இது சிறந்த உதாரணமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications