பிரதமர் மோடி பாதுகாப்புக்கு.. தினசரி ரூ.1.34 கோடி.. ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.58 லட்சம் செலவு!
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கும் 2025-26 நிதியாண்டில் ஒதுக்கப்படும் நிதி தொடர்பான அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். அதன்படி பிரதமரைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படைக்கு ரூ.489 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமரைப் பாதுகாக்க ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.5.5 லட்சம் செலவிடப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். காலை 11 மணிக்குத் தனது நாடாளுமன்றத்தில் அவர் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய நிலையில், அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

எஸ்பிஜி படைக்கு எவ்வளவு?
மேலும், எந்தெந்த துறைக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். அதன்படி உள்துறை அமைச்சகத்திற்கு ரூ 2,33,210.68 கோடியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகையில் சுமார் 70%, அதாவது ரூ 1,60,391.06 கோடி நாட்டின் பாதுகாப்புப் படைகளான சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் மற்றும் சிஐஎஸ்எஃப் படைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது. இந்த படைகள் தான் உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு உள்ளிட்டவற்றை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது..
அதேபோல பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படைக்கு ரூ.489 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமரின் பாதுகாப்பிற்கு ஒரு நாளுக்கு ரூ.1.34 கோடி செலவிடப்படுகிறது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.58 லட்சமும், ஒரு நிமிடத்திற்கு 9303 ரூபாயும் செலவிடப்படுகிறது.
எஸ்பிஜி படை என்றால் என்ன?
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு 1988ஆம் ஆண்டு இந்த எஸ்பிஜி உருவாக்கப்பட்டது. இந்த எஸ்பிஜி படை டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் எஸ்பிஜி படையில் உள்ள வீரர்கள் அனைவருமே அதிநவீன சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். இந்தியப் பிரதமரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பதே எஸ்பிஜி அமைப்பின் பிரதான பணியாகும். இந்த எஸ்பிஜி படையில் சுமார் 3000 பேர் வரை இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
யூனியன் பிரதேசங்கள்
அதேபோல யூனியன் பிரதேசங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கு அதிகபட்சமாக ரூ.41,000.07 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு ரூ.6,212.06 கோடியும், சண்டிகருக்கு ரூ.6,187.48 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூவுக்கு ரூ.2,780 கோடியும், லடாக்கிற்கு ரூ.4,692.15 கோடியும், லட்சத்தீவுக்கு ரூ.1,586.16 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.3,432.20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதர பாதுகாப்பு படைகள்:
துணை ராணுவப் படைகளில், அதிகபட்சமாக சிஆர்பிஎஃப் படைக்கு ரூ.35,147.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்புப் படைக்கு ரூ.28,231.27 கோடி, சிஐஎஸ்எஃப் படைக்கு ரூ.16,084 கோடி, ITBPக்கு ரூ. 10,370 கோடி, அசாம் ரைபிளிஸ் படைக்கு ரூ. 8,274.29 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications