வெறும் 27 ரூபாயில் "பாரத் ஆட்டா".. தமிழகத்துக்கு மத்திய அரசு தந்த சர்ப்ரைஸ்.. குஷியில் தமிழக மக்கள்
டெல்லி: மத்திய அரசின் பாரத் ஆட்டா சேவை தமிழகத்துக்கும் படர்ந்துள்ளது.. இதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இது தமிழக மக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
நாடு முழுதும் வெளிச்சந்தையில் கோதுமை கோதுமை மாவு ஆகியவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது..

அந்தவகையில், சாதாரண நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, 4 நாட்களுக்கு முன்புகூட, பாரத் ஆட்டா என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த திட்டத்தை டெல்லியில் துவக்கி வைத்திருந்தார்..
மலிவு விலை: 'பாரத்' பிராண்டின் கீழ் ஆட்டா (கோதுமை மாவு) விற்பனை செய்வதற்கான 100 நடமாடும் வேன்களை, கொடியசைத்து துவக்கி அமைச்சர் வைத்தார்.
இப்போதைக்கு ஒரு கிலோ கோதுமை மாவு, ரூ.36 முதல் 70 வரைக்கும் விற்கப்பட்டு வரும்நிலையில், ஆட்டா மாவு ஒரு கிலோ 27.50 ரூபாய்க்கு கிடைக்கும் என்பதே இந்த திட்டத்தின் ஹைலைட்டாகும். விவசாயிகளின் விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வரும்நிலையில், இந்த 'பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையானது துவங்கப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனை: சாதாரண நுகர்வோரின் நலனுக்காக மத்திய அரசு எடுத்துள்ள தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றாலும், 'பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையானது, சந்தையில் மலிவு விலையில் விநியோகத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
அத்துடன், இந்த முக்கியமான உணவுப் பொருளின் விலை குறைய உதவும் என்றும் நடமாடும் விற்பனை மையங்களிலும், மற்ற கூட்டுறவு அமைப்பின் கீழ் செயல்படும கடைகளிலும் இந்த பாரத் ஆட்டா கிடைக்கும்" என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
மிகப்பெரிய முயற்சி: மத்திய அரசின் இந்த முன்னெடுப்பானது, விவசாயிகளுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. காரணம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், அத்தியாவசிய பொருட்களை சாமானியர்களுக்கு கட்டுப்படியாக கூடியதாகவும் மாற்றுவதற்கான, அரசின் மிகப்பெரிய முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. அந்தவகையில், இந்த திட்டத்தின் மூலம், இந்தியா முழுவதும் சுமார் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நம்முடைய தமிழகத்திற்கு 1000 டன் பாரத் ஆட்டா கோதுமை மாவை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது.. அரிசிக்கு அடுத்தபடியாக, கோதுமையை தமிழக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.. அதனால்தான் ரேஷனிலும் கோதுமைக்கு பெரும் டிமாண்டு இருந்துவருகிறது..
இந்நிலையில், தமிழகத்தில் பாரத் ஆட்டா கோதுமை மாவு விற்பனை செய்யும் பணியை "நாபெட்" எனப்படும், மத்திய கூட்டுறவு நிறுவனம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1000 டன் பாரத் ஆட்டா ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது..
நாபெட் நிறுவனத்திற்கு கிலோ கோதுமையை 21.50 ரூபாய்க்கு இந்திய உணவு கழகம் வழங்கும். அதை அந்நிறுவனம் ஆலைகளில் கோதுமை மாவாக அரைக்க போகிறதாம்.. தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பொது மக்களுக்கு அடுத்த மாதம் முதல் இந்த பாரத் ஆட்டா கோதுமை மாவு விற்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications