Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஸ்ட்ரீட் வியூ"! சென்னை, பெங்களூர் உட்பட 10 நகரங்களில் அறிமுகம்.. தெறிக்கவிடும் கூகுளின் புதிய வசதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கூகுள் நிறுவனம் தனது முக்கிய வசதியான ஸ்ட்ரீட் வியூ வசதியை 10 நகரங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

நமது அனைவரது மொபைலிலும் நிச்சியம் இடம் பெற்றுள்ள செயலி கூகுள் மேப்! புதிய இடங்களுக்குச் செல்லும் போது கூகுள் மேப் நமக்குச் செய்யும் உதவி மிக பெரியது.

அதேநேரம் கூகுள் மேப்பை பின்பற்றி நூல் பிடித்தார் போல சென்று, முட்டு சந்தில் முட்டிக் கொள்ளும் காமெடி நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது.

கூகுள் மேப்

கூகுள் மேப்

இருந்த போதிலும், பெரும்பாலான நேரங்களில் கூகுள் மேப்பின் செயல்பாடுகள் பேருதவியாகவே இருக்கும். கூகுள் மேப் ரியல் டைம் டிராபிக் எனப்படும் தற்சமய போக்குவரத்து நெரிசலையும் கணக்கிட்டு வழியைக் காட்டும் என்பதால், வழி தெரியாதவர்கள் மட்டுமின்றி, தினந்தோறும் அதிக தூரம் பயணிக்க வேண்டிய பலரும் கூகுள் மேப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

ஸ்ட்ரீட் வியூ

ஸ்ட்ரீட் வியூ

கூகுள் மேப்பின் செயல்பாடுகளை மேலும் துல்லியமானதாக மாற்ற அந்நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஸ்ட்ரீட் வியூ (Street View) எனப்படும் புதிய வசதியைக் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த புதன்கிழமை கூகுள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

ஸ்ட்ரீட் வியூ என்றால் என்ன

ஸ்ட்ரீட் வியூ என்றால் என்ன

ஸ்ட்ரீட் வியூ வசதி ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் இப்போது தான் இந்த வசதி முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. ஸ்ட்ரீட் வியூ வசதியில் பயனாளிகளால் ஒரு நகரத்தின் சாலைகள் மற்றும் பொதுக் கட்டிடங்களை 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும். இது நாம் எங்கே இருக்கிறோம், எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்பது குறித்துத் தெளிவான ஐடியாவை நமக்குத் தருகிறது.

10 நகரங்கள்

10 நகரங்கள்

​​ஜெனிசிஸ் மற்றும் டெக் மகேந்திரா உடன் இணைந்து கூகுள் இந்த வசதியைக் கொண்டு வருகிறது. அரசின் பாதுகாப்புத் துறை சார்ந்த இடங்கள் உட்பட சில இடங்களைத் தவிர அனைத்து இடங்களும் 360 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கப்படும். டெல்லி, மும்பை, புனே, நாசிக், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், வதோதரா, அமிர்தசரஸ், அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் இந்த வசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.

1.50 லட்ச கிலோமீட்டர்

1.50 லட்ச கிலோமீட்டர்

முதற்கட்டமாக 10 நகரங்களில் 1.50 லட்ச கிலோமீட்டர் தொலைவிற்கான ஸ்ட்ரீட் வியூ வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 50 நகரங்களுக்கு இந்த ஸ்ட்ரீட் வியூ வசதி விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவைத் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் இந்த வசதியை அறிமுகப்படுத்தி உள்ளதாகக் கூகுள் அறிவித்துள்ளது.

8 நகரங்களில் புதிய வசதி

8 நகரங்களில் புதிய வசதி

மேலும், டெல்லி, ஹைதராபாத், சண்டிகர், அகமதாபாத், கொல்கத்தா, குர்கான், பெங்களூர் மற்றும் ஆக்ரா உள்ளிட்ட எட்டு நகரங்களில் சாலை மூடல்கள் மற்றும் விபத்து சம்பவங்கள் பற்றிய தகவலைக் கொடுக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பெஸ்ட் வழியை மக்களால் தேர்வு செய்ய முடியும் என்று கூகுள் தெரிவித்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+