புதிய அமைச்சரவையில் அசத்தும் 6 பெண் அமைச்சர்கள்.. மோடியின் அமைச்சரவையில் பெண்களுக்கு 10% இடம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் பட்டியல்

    டெல்லி: மோடியின் அமைச்சரவையில் 6 பெண்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு 10% இடம் அளிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி நேற்று நாட்டின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றார். இதனை முன்னிட்டு டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை விழாக்கோலம் பூண்டிருந்தது.

    பதவியேற்பு விழாவில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழகம், டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்கள் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

    சிறப்பு விருந்தினர்கள்

    சிறப்பு விருந்தினர்கள்

    தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி, ரத்தன் டாடா உட்பட பல தொழிலதிபர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் இலங்கை, ஈரான், கிர்கிஸ்தான், தாய்லாந்து, பூடான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் மோடியின் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    தலைதாழ்ந்து வணக்கம்

    தலைதாழ்ந்து வணக்கம்

    இதைத்தொடர்ந்து சரியாக இரவு 7 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் குடியரசுத் தலைவர் மாளிகையின் தர்பார் ஹால் பகுதிக்கு வந்த மோடி, கூடியிருந்த விருந்தினர்களுக்கும் பொதுமக்களுக்கும் தலை தாழ்ந்து கைக்கூப்பி வணக்கம் கூறினார்.

    புதிய முகங்கள்

    புதிய முகங்கள்

    இதைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியை தொடர்ந்து 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். மோடி அமைச்சரவையில் பல புதிய முகங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    6 பெண் அமைச்சர்கள்

    6 பெண் அமைச்சர்கள்

    மேலும் மோடியின் அமைச்சரவையில் 6 பெண் அமைச்சர்களுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பாஜகவை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி மற்றும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆவர். இவர்கள் 3 பேரும் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

    பெண்களுக்கு 10% இடம்

    பெண்களுக்கு 10% இடம்

    மேலும் பெண் சாமியாரான பாஜகவின் சாத்வி நிரஞ்சன் ஜோதி மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ளார். அதேடு ரேணுகா சிங் மற்றும் தேவஸ்ரீ சவுத்ரி ஆகியோரும் இம்முறை மத்திய இணை அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். மொத்தம் 6 பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது மோடி அமைச்சரவையின் 10% இடமாகும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+