தங்கத்தை விடுங்க.. 10 கிராம்.. 85 லட்சத்திற்கு விலைபோகுதாம்.. கடவுளின் மரம் பற்றி தெரியுமா?
டெல்லி: தங்கமும், வைரமும் தான் இந்த உலகத்தில் மதிப்பு மிக்க பொருளாக பலரும் நினைந்திருந்தாலும், அதை விட பலமடங்கு மதிப்பு கொண்ட சில அரிய வகை பொருட்களும் உள்ளன. அதுவும் மரக்கட்டையின் 10 கிராம் மட்டுமே ரூ.85 லட்சத்திற்கு விற்பனை ஆகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அந்த மரம் எது என்றும் அந்த மரங்கள் எங்கே காணப்படுகின்றன என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தங்கம், வைரம் போன்ற உலோகங்கள் மிகவும் மதிப்பு மிக்கவையாக இருக்கும் என்று பலரும் நினைத்திருக்க கூடும். தங்கத்தை விட பலமடங்கு மதிப்பு கொண்ட சில அரிய பொருட்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதிலும் வெறும் 10 கிராம் மட்டும் ரூ.85 லட்சத்திற்கு விற்பனையாகும் கையனம் (Kynam) என்று அறியப்படும் இந்த மரம் பூமியில் காணப்படும் மரங்களில் மிகவும் அரிதானகவும், விலை உயர்ந்ததாகவும் கருதப்படுகிறது.

கடவுளின் மரம் என்று இது அழைக்கப்படும் இது அரிய வகை அகர்வுட் (நறுமணமரம்) ஆக உள்ளது. உலகிலேயே அரிதான மரம் என்பதால் இது வெளிநாடுகளில் எங்கேயாவது இருக்கும் என நினைத்துவிட வேண்டாம். இந்த மரம் தெற்காசியாவில் அதிகம் காணப்படுகிறது. அதாவது, இந்தியா, சீனாவில் இந்த மரங்களை காணமுடியுமாம். மத்திய கிழக்கு நாடுகளிலும் இது அதிகம் காணப்படுகிறது.
இந்த மரம் அதன் நறுமணம் மற்றும் புனித தன்மை ஆகியவற்றால் இவ்வளவு விலை மதிப்பு மிக்கதாக அறியப்படுகிறது. வாசனை திரவிய தயாரிப்பு துறையில் இந்த மரம் முக்கிய பங்காற்றுகிறது. இந்த மரம் சிதைந்த பிறகும் கூட உபயோகப்படுகிறது. அதன் எச்சங்கள் வாசனை திரவிய உற்பத்தியில் பெருமளவு பயன்படுகிறது. அகர்மரத்தில் வரும் பிசினிலிருந்து, அவுட் (oud) எனும் ஒருவகை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் மட்டுமே, அத்தியாவசியமாக உள்ளது.
வெறும் 10 கிராம் கைனம் விலை ரூ.85.63 லட்சம் என்று சொல்லப்படுகிறது. இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் விலை மதிக்க முடியாத பொருள்களில் ஒன்றாகவும் இது உள்ளது. இந்த விலைக்கு ஒருவர் ஒரு கிலோ தங்கத்தையே வாங்கிவிடலாம். அதிர்ஷ்டத்திற்காக சில நேரம் இந்த மரங்களின் துண்டுகள் பெரிய அளவிலும் வாங்கப்படுகிறது. ஒருமுறை 16 கிலோ மரம் வாங்கப்பட்டது. அதன் விலை ரூ.171 கோடியாகும்.
கைனம் மரத்தின் இந்த அரிய மதிப்புக்கு மிகவும் சிக்கலான கணிக்க முடியாத செயல்பாடுகள் நடைபெறுகின்றன. இயற்கையாகவே அகர்வுட்டை உற்பத்தி செய்யும் அக்விலேரியா மரத்தில் ஒரு வகையான பூஞ்சை தொற்றால் மாற்றம் ஏற்பட்டு மதிப்புமிக்கதாக மாறுகிறது. இந்த நடைமுறைக்கு பல தசாப்தங்கள் ஆகும். அகர்வுட் மரங்களின் சிறிய பகுதி மட்டுமே கைனம் என வகைப்படுத்தப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் அகர்வுட் மரங்களின் சிறிய துண்டுகள், விருந்தினர்களை வரவேற்பதற்காக எரிக்கப்படும் பாரம்பரிய முறை உள்ளது. வீட்டில் நீடித்த வாசனையை இது ஏற்படுத்தும். கொரியாவில், மருத்துவ ஒயின்களில் மரம் ஒரு அத்தியாவசிய மூலப்பொருளாக உள்ளது, அதே மருத்துவம் சார்ந்த ஒயின்களில் ஒரு பொருளாக சேர்க்கப்படுகிறது. ஜப்பான் மற்றும் சீனாவில் ஆன்மீக நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் அசாம் அகர்வுட் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.
-
தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
தங்கத்தை எந்த இடத்தில் மறைத்து கடத்துவதுனு விவஸ்தையே இல்லாம போச்சே! ஆடி போன அகமதாபாத் சுங்கத் துறை -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications