Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி, கோவை.. நாடு முழுவதும் 10-வது சர்வதேச யோகா தினம்- ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 10-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் இன்று காலையில் நடைபெற்றன. மாநிலங்களின் ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், ராணுவ தளபதிகள் உள்ளிட்டோர் சர்வதேச யோகா தின நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

உலக அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரு நரேந்திர மோடியின் தொலை நோக்குடன் கூடிய இந்த பிரகடனம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின்
69-வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 10-வது சர்வதேச யோகா தினம் 2024 இன்று கொண்டாடப்படுகிறது.

delhi

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை சிறப்பு யோகா நிகழ்வுகள் நடத்தப்பட்டன. டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, பிஎல் வர்மா, ராணுவ தளபதி உபேந்திரா திவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி உள்ளிட்டோர் யோகா நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

delhi

லடாக்கின் லே பகுதியில் ராணுவ வீரர்கள் இன்று காலை யோகா நிகழ்வுகளில் பங்கேற்றனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் யோகா நிகழ்வுகள் நடைபெற்றன. மேற்கு வங்க மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் யோகா நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்திலும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

delhi

கோவையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி: 10வது சர்வதேச யோகா தினத்தன்று, ஆளுநர் ரவி, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆர்வமிக்க மற்றும் துடிப்பான இளைஞர்களுடன் சேர்ந்து முழு ஆரோக்கியம் மற்றும் உலகளாவிய நல்வாழ்வுக்கான நமது காலத்தால் அழியாத பாரம்பரிய யோகாவை கொண்டாடும் விதமாக யோகா பயிற்சி செய்தார் என ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+