மணிப்பூர்: 11 பேர் சுட்டுக்கொலை.. தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அதிரடி!
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜிரிபாம் பகுதியில் நடந்த மோதலில் பாதுகாப்புப் படையினரால் ஆயுதக் குழுவைச் சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குக்கி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறி, இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.

தொடர்ந்து, அவ்வப்போது இரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. அண்மையில், ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் - ஆயுதக் குழுவினர் இடையே நடந்த மோதலில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஒரு சி.ஆர்.பி.எஃப் படை முகாம் மீது ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளனர்.
இதில் ஆயுதக் குழுவைச் சேர்ந்த 1 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எல்லையோர மாவட்டத்தில் குக்கி பிரிவைச் சேர்ந்த ஆயுதக் குழுவினர் நடத்திய இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சிலர் காயமடைந்ததாக தெரிகிறது. பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications