ரயில் பயணிகளுக்கு திடீர்னு வந்த அறிவிப்பு.. மொத்தமா கேன்சல் ஆகும் 12 ரயில்கள்.. உடனே நோட் பண்ணுங்க
டெல்லி: ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை பயணிகளுக்காக வெளியிட்டுள்ளது.. இதைக்கேட்டு ரயில் பயணிகள் கடும் அதிருப்திக்கும், சிரமத்துக்கும் ஆளாகி உள்ளனர்.
பொதுமக்களின் நன்மைக்காக ரயில்வே துறை பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது.. சமீபத்தில்கூட, ஐஆர்சிடிசி இணையதள டிக்கெட் முன்பதிவில், ரயில் நிலைய ஊர் பெயர்களை எளிதில் கண்டறியும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்போது, 82 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் ரயில் நிலையங்களில் ஊர் பெயர்களை எளிதில்கண்டறியும் வகையில், மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. .
சிறிய ரயில் நிலையங்கள்: இந்த திட்டத்தின்படி, 175 நகரங்களில் உள்ள, 725 ரயில் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறிய ரயில் நிலையங்களை அடையாளம் காணும் வகையில், பிரபலமான பகுதிகள், நகரங்கள் ஆகியவை, அந்த சிறிய ரயில் நிலையங்களின் பெயருடன் இணைக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக, சென்னையை தேடும்போது, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் காண்பிக்கும். அதேபோல், முக்கிய நகர் பெயரை தேடும்போது, அங்குள்ள மற்ற ரயில் நிலையங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இத்துடன், பராமரிப்பு காரணங்களால், ரயில் புறப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால், அதற்கு பதிலாக மாற்று ரயில் நிலையத்தை காட்டியும் பயணிகளுக்கு இது உதவுகிறது என்று ரயில்வே அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள்: அதேபோல, பராமரிப்பு பணிகளையும் ரயில்வே நிர்வாகம் மேற்கொள்வதால், அதுகுறித்த அறிவிப்புகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
இந்த பணிகள் காரணமாக, சமீப நாட்களாகவே, தெற்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே, வடக்கு ரயில்வே, மேற்கு ரயில்வே, மத்திய கிழக்கு ரயில்வே உள்ளிட்ட டிவிஷன்களில் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இப்போதும் சில ரயில்கள் ரத்தாகி உள்ளன. அதுகுறித்து, மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, சத்தீஸ்கர் வழித்தடத்தில் இயங்கும் 12 ரயில்களை, பராமரிப்பு காரணமாக, இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.
ரயில்வே நிர்வாகம்: சத்தீஸ்கரில் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுடன், மழைக்காலங்களில் தண்டவாளங்களை பராமரிப்பதற்காக ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து ரயில்களை ரத்து செய்து வரும் நிலையில், நாளை ஆகஸ்ட் 16 முதல் 23 வரை சத்தீஸ்கர் வழியாக இயக்கப்படும் ஐஆர்சிடிசி ரயில்கள் ரத்தாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் இதுதான்: ரயில் எண் 08745 கெவ்ரா சாலை-ராய்ப்பூர் மெமு பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ராய்ப்பூர்-கெவ்ரா சாலை மெமு பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் எண் 08740/08739, பிலாஸ்பூர்-ஷாதோல்-பிலாஸ்பூர் மெமு பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 07810 கடங்கி-கோண்டியா பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ராய்ப்பூர்-டோகர்கர் இடையே இயக்கப்படும் ரயில் எண் 08729 மெமு பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் எண் 08730 டோகர்கர்-ராய்ப்பூர் மெமு பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 08701/08702 ராய்ப்பூர்-துர்க்-ராய்ப்பூர் மெமு பயணிகள் சிறப்பு ரயிலை ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் எண் 07809 கோண்டியா-கடாங்கி பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் எண் 07805/07806 கோண்டியா-கடங்கி-கோண்டியா இடையே இயக்கப்படும் டெமு பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெருத்த சிரமம்: தண்டவாளத்தின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும், இப்படி திடுதிப்பென்று 12 ரயில்களும் ஒரே நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications