பால் எடுக்க சென்றபோது பாய்ந்த மின்சாரம் – கிரிக்கெட் விளையாடிய சிறுவனுக்கு சோகம்
டெல்லி: டெல்லியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது, மின்சாரம் பாய்ந்து 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பால் எடுக்க செல்லும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாலைகளிலும், ஒவ்வொரு வீடுகளிலும் ஆழமாக ஊடுருவியுள்ளது. அதிலும் வார இறுதி நாட்களில் மாணவர்கள் தொடங்கி வேலைக்கு செல்பவர்கள் வரை மைதானங்களில் கிரிக்கெட் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் மேற்கு டெல்லியின் கோட்லா விஹார் பகுதியில் உள்ள மைதானத்தில் 13 வயது சிறுவன் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது பேட்ஸ்மேன் அடித்த பாலை எடுப்பதற்காக சிறுவன் சென்றுள்ளார். திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கியுள்ளது. மைதானத்துக்கு அருகில் இருந்த மாடு பண்ணைக்கு செல்லும் இரும்புக் கம்பத்தின் ஒயர் மூலம் சிறுவனுக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவனை தீன்தயால் உபாத்யாத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் வருகிற வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல டெல்லி பிந்தபூர் அருகே கடந்த மாதம் 12 வயது சிறுவன் டியூசன் முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதேபோல மிதாபூர் பகுதியில் 28 வயது இளைஞர் ஒருவர் தன் வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். டெல்லியில் தொடர்ந்து நடைபெறும் இந்த சம்பவங்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம், டெல்லி அரசு, டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்சாரம் தாக்கி உயிரிழப்பவர்களுக்கு ரூ.7.5 லட்சம் மற்றும் மின்சாரம் தாக்கி 60 சதவீதத்துக்கும் மேல் காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. 40 - 60 சதவீதம் காயமடைந்தவர்களுக்கு ரூ 1 லட்சமும், மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.25,000, ஒரு வாரத்துக்கு கீழ் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications