15 கவுன்சிலர்கள் அவுட்.. டெல்லி மாநகராட்சியில் வலுவை இழக்கிறது ஆம் ஆத்மி!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தை டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்கள் 15 பேர் ராஜினாமா செய்திருக்கின்றனர். இதன் மூலம் மாநகராட்சியில் ஆம் அத்மி கட்சி பலம் இழந்திருக்கிறது.
கழன்று வந்த கவுன்சிலர்கள் பாஜகவில் இணையப்போவதில்லை என்றும், புதியதாக 'இந்திரபிரஸ்தா விகாஸ்' எனும் புதிய கட்சியை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த 15 பேரில் டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மியின் அவைத் தலைவராக பணியாற்றிய முகேஷ் கோயலும் ஒருவர். எனவே இது ஆம் ஆத்மிக்கு கவுரவப் பிரச்சனையாக மாறியிருக்கிறது. புதியதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்திரபிரஸ்தா விகாஸ் கட்சிக்கு ஹேம்சந்த் கோயல் தலைமை தாங்குவார் என்றும், முகேஷ் கோயல், ஹிமானி ஜெயின், தேவிந்திர குமார், ராஜேஷ் குமார் லாடி, சுமன் அனில் ராணா, தினேஷ் பரத்வாஜ், ருணக்ஷி சர்மா, மனிஷா, சாஹிப் குமார், ராக்கி யாதவ், உஷா சர்மா மற்றும் அசோக் பாண்டே ஆகியோர் இதில் இடம் பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
"நாங்கள் 2022ம் ஆண்டு கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். 2.5 ஆண்டுகள் கடந்து போய்விட்டன. ஆனாலும் கூட, எங்களால் மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை. மாநகராட்சி கூட்டங்களும் கூட ஒழுங்காக நடகவில்லை. எங்கள் முடிவுகளுக்கு மதிப்பளித்து மற்ற உறுப்பினர்களும் எங்களுடன் கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என முகேஷ் கோயல் கூறியுள்ளார். கோயல் சமீபத்தில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தார். ஆனால் வெற்றிப்பெறவில்லை.
"கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் தலையீடு காரணமாக நலத்திட்ட பணிகளை எங்களால் செயலப்டுத்த முடியவில்லை. உயர்மட்டத் தலைமைக்கும் நகராட்சி கவுன்சிலர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு குறைவாக இருக்கிறது. பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் நாங்கள் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து எங்களை விடுவித்துக்கொள்கிறோம்" என்றும் கவுன்சிலர்கள் புலம்பியுள்ளனர்.
கவுன்சிலர்களின் கட்சித் தாவல் இப்போது ஏதோ புதியதாக நடப்பது கிடையாது. கடந்த பிப்ரவரி மாதத்தில் அனிதா பசோயா, நிகில் சப்ரானா, தர்மவீர் சிங் என மூன்று கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவினர்.
டெல்லி மாநகராட்சியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது. மொத்தமுள்ள 260 இடங்களில் பாஜக 116, ஆம் ஆத்மி 114, காங்கிரஸ் 8 என கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த கட்சி தாவல் ஆம் ஆத்மிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
-
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
ஹசீனா சையத் கீழ்த்தரமான குணத்தை காட்டிட்டாங்க! காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அட்டாக்! -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி












Click it and Unblock the Notifications