10 ஆண்டுகளில் 15 எய்ம்ஸ் கொண்டு வந்துள்ளோம்.. நிர்மலா சீதாராமன் பேச.. ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளே தொடங்கப்படாததை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

17ஆவது மக்களவையின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள ஆறாவது பட்ஜெட் இது.

15 AIIMS in last 10 years: says FM Nirmala sitharaman in budget speech

பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 57 நிமிடங்களில் தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார். ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகிய 4 தரப்பின் முன்னேற்றத்துக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

மேலும், கல்வித்துறையில் சீர்திருத்தங்களை புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் செயல்படுத்தி வருகிறோம் என்றும், 10 ஆண்டுகளில் 7 ஐஐடிகள், 7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ், 390 பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்போது 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்நிலையில், அடுத்த மக்களவைத் தேர்தலே வந்துவிட்ட நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளே இன்னும் தொடங்கவில்லை. இதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி மட்டுமே நடந்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்துடன் 2021ஆம் ஆண்டு கடன் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், கட்டுமானப் பணிகளை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

நாட்டின் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுமானப் பணி முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால், மதுரை எய்ம்ஸ் இன்னும் பணிகள் தொடங்காமலே உள்ளது. ஆனால், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 10 ஆண்டுகளில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பெருமையாக பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சை குறிப்பிட்டு, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளே தொடங்கப்படாத படங்களை பகிர்ந்து, நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+