டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில்.. சோதனையில்160 கி.மீ வேகத்தில் சீறிப்பாய்ந்தது..எங்கே தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் அதிவேக மெட்ரோ ரயிலான ஆர்ஆர்டிஎஸ் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில்களின் வேகத்தை விட 3 மடங்கு அதிக வேகத்தில் இந்த ரயிலை இயக்க முடியும்.

இந்தியாவில் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ரயில் சேவைகளில் பல்வேறு புதுமைகளை மத்திய அரசு புகுத்தி வருகிறது.

தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் வந்தே பாரத், சதாப்தி போன்ற சொகுசு மற்றும் அதிவேக ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் மத்தியிலும் ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை மெட்ரோ ரயிலில் பார்த்தால்.. ஆஹா அமைச்சர் பிடிஆர்! வியந்த மக்கள்.. ஹேப்பி உரையாடல்சென்னை மெட்ரோ ரயிலில் பார்த்தால்.. ஆஹா அமைச்சர் பிடிஆர்! வியந்த மக்கள்.. ஹேப்பி உரையாடல்

 மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில்

மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில்

தற்போது அடுத்தட்ட நடவடிக்கையாக மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் இயங்கும் RRTS என்று அழைக்கப்படக்கூடிய Regional Rapid Transit System என்ற முறையை மத்திய அரசு அமல்படுத்த தொடங்கியுள்ளது. இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் என்று அழைக்கப்படும் இந்த ரயிலானது தற்போது மெட்ரோ ரயில்கள் செல்லும் வேகத்தை விட மூன்று மடங்கு அதிவேகமாக இயக்க முடியும். மெட்ரே ரயிலை போன்றே இதுவும் உயர் மட்டம் பாதைகள் மற்றும் சுரங்கம் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.30,274 -கோடி செலவில்

ரூ.30,274 -கோடி செலவில்

முதல் கட்டமாக டெல்லி காசியாபாத் மற்றும் மீரட் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 82 கி.மீட்டர் தொலைவிற்கு செயல்படுத்தப்படும் இந்த ஆர்ஆர்டிஎஸ் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.30,274 -கோடியாகும். இந்த திட்டத்தை NCRTC- செயல்படுத்தி வருகிறது. 82 கி.மீட்டர் கொண்ட வழித்தடத்தில் மொத்தம் 14 ரயில் நிலையங்களும் 2 பணி மனைகளும் அமைகின்றன. இந்த வழித்தடம் 68.03 கி.மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட பாதையாகவும் 14.12 கி.மீட்டர் தொலைவு சுரங்கப்பாதையாகவும் அமையும்.

17 கி.மீ சோதனை ஓட்டம்

17 கி.மீ சோதனை ஓட்டம்

இந்த ஆர்.ஆர்.டி.எஸ் ரயிலின் சோதனை ஓட்டம் அண்மையில் நடைபெற்றது. துஹாய் டிப்போ முதல் காசியாபாத் வரை இந்த சோதனை ஓட்டமானது நடைபெற்றது. 17 கி.மீட்டர் தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் ரயில் சீறிப்பாய்ந்தது. மின்சார சோதனையை செய்ய இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றதாகவும் வரும் நாட்களில் முறையான சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையாக

இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையாக

துஹாய் டிப்போ முதல் காசியாபாத் வழித்தடத்தில், வரும் மார்ச் மாதம் முதல் இந்த அதிவேக மெட்ரோ ரயில்கள் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் வழித்தத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. டெல்லி மீரட் (ஆர்.ஆர்.டி.எஸ்) இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தான்ர். டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் வழித்தடத்தில் சராய் கலே கான், நியூ அசோக் நகர், ஆனந்த் விஹார், சஹிதாபாத்,காசியபாத், குல்த்ஹர், துஹாய், முரத்நகர், மோடிநக சவுத், மோடிநகர் நார்த், மீரட் சவுத், சதாப்தி நகர், பெகுபுல் மற்றும் மோடிபுரம் உள்ளிட்ட 24 நிலையங்கள் உள்ளன.

English summary
The first trial run of India's fastest metro train, the RRTS train, took place a few days ago. This train can run at a speed 3 times faster than the current metro trains.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X