மத்திய வரி வருவாயில் தென் மாநிலங்களுக்கான பங்கு அதிகரிப்பு! வட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைவு
டெல்லி: 16-வது நிதி ஆணையத்தின் புதிய பரிந்துரைகளின்படி, மத்திய வரி வருவாயில் தென் மாநிலங்களுக்கான பங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வட மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது.
மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியைப் பிரித்தளிக்கப் பயன்படுத்தும் அளவுகோல்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய மாற்றங்கள் தென் மாநிலங்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளன. புதிய அளவுகோளின்படி, தென்னிந்திய மாநிலங்களுக்கான மத்திய வரிப் பங்கீட்டை அதிகரித்துள்ளது. அதேசமயம், உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய ஐந்து பாஜக ஆளும் இந்தி பேசும் மாநிலங்களின் ஒதுக்கீடுகள் குறைந்துள்ளன.

எந்தெந்த மாநிலங்கள் பலன் பெறும்?
கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து தென் மாநிலங்கள், முந்தைய ஆணையத்தின் ஒதுக்கீட்டை விட அதிக பயன் பெறுகின்றன. சிறந்த வளர்ச்சி நிலைகளையும், அதிக வருவாய் பங்களிப்பையும் மேற்கோள் காட்டி, நீண்ட நாட்களாக அதிக நிதிப் பங்குக்காக வாதிட்டு வந்த தென் மாநிலங்களுக்கு, இது நிவாரணம் அளிப்பதாகப் பார்க்கப்படுகிறது.
புதிய அளவுகோள்கள்
புதிய அளவுகோளின் கீழ், மாநிலத்தின் 'மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) பங்களிப்பு' (10% வெயிட்டேஜ்) என்ற புதிய அளவுகோல் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், 'பரப்பளவு'க்கான வெயிட்டேஜ் 15% இல் இருந்து 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தென் மாநிலங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன. 16வது நிதி ஆணையத்தின் புதிய சூத்திரம், 6 முக்கிய அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது.
- மக்கள் தொகை (17.5%)
- மக்கள் தொகைப் பெருக்கக் கட்டுப்பாடு (10%)
- மாநிலப் பரப்பளவு (10%)
- வனப் பரப்பளவு (10%)
- தனிநபர் GSDP தூரம் (42.5%)
- GDP-க்கான பங்களிப்பு (10%)
தனி நபர் வருமானம்
இதன்படி, 2026-27 நிதியாண்டில் ₹15.26 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் மொத்த நிதிப் பங்கீட்டில், இந்த 5 தென் மாநிலங்களுக்கும் கூடுதலாக ₹18,330 கோடி கிடைக்கும். தனிநபர் GSDP தூரம் என்பது ஒரு மாநிலத்தின் தனிநபர் வருமானத்திற்கும், இந்தியாவின் அதிக வருமானம் கொண்ட மாநிலத்தின் தனிநபர் வருமானத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் குறிக்கிறது.
தென் மாநிலங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்
மாநில வாரியான கூடுதல் நிதிப் பகிர்வு விவரங்களை பொறுத்தவரை, கர்நாடகா 3.64% இலிருந்து 4.13% ஆக உயர்ந்து, ₹7,387 கோடி கூடுதல் நிதி கிடைக்கும். கேரளா 1.92% இலிருந்து 2.38% ஆக உயர்ந்து, ₹6,975 கோடி கூடுதல் நிதியை பெறும். ஆந்திரப் பிரதேசம்: 4.04% இலிருந்து 4.21% ஆக உயர்ந்து, ₹2,594 கோடி கூடுதல் நிதியை பெறும். தெலங்கானா: 2.10% இலிருந்து 2.17% ஆக உயர்ந்து, ₹1,099 கோடி கூடுதல் நிதியை பெறும். தமிழ்நாடு: 4.07% இலிருந்து 4.09% ஆக உயர்ந்து, ₹274 கோடி கூடுதல் நிதியை பெறும்.
வேறு மாநிலங்கள்
வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களான தமிழ்நாட்டிற்கும், கேரளாவிற்கும் இந்த நிதிப் பங்கீடு முக்கியத்துவம் பெறுகிறது. குஜராத், ஹரியானா, பஞ்சாப், அஸ்ஸாம், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், மிசோரம், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களும் இந்த புதிய சூத்திரத்தின் கீழ் பலனடைந்துள்ளன.
மத்தியப் பிரதேசம் அதிகபட்ச சரிவைச் சந்தித்துள்ளது (7.85% இலிருந்து 7.35% ஆகக் குறைவு). கோவா, சிக்கிம், திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர், ஒடிசா, மேகாலயா, மேற்கு வங்கம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வரிப் பங்கும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications