24 மணி நேரத்தில் நாடு முழுக்க புதிதாக 1718 கொரோனா நோயாளிகள்.. மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 1718 புதிய கொரோனா கேஸ்கள் நாடு முழுக்க பதிவாகியுள்ளன. மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 33050 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவில் தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 25.19% ஆக உயர்ந்துள்ளது.

1718 new cases have been reported in the last 24 hours in India

இது 14 நாட்களுக்கு முன்பு 13.06% ஆக இருந்தது. இறப்பு விகிதம் 3.2% என்ற அளவில் உள்ளது. 78% இறப்புகளில் நோயாளிகளுக்கு வேறு உடல்நல பாதிப்புகள் இருந்தது தெரியவந்தது.

கேஸ்களின் இரட்டிப்பு விகிதம் இப்போது 11 நாட்களாக உயர்ந்துள்ளது. சோதனை மற்றும் சிகிச்சை நெறிமுறையைப் பொருத்தவரை, நாங்கள் ஆர்டிபி-சிஆர் சோதனையை மட்டுமே பயன்படுத்துகிறோம். இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்தார்.

மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற சிக்கித் தவிக்கும் மக்களை அவர்களின் சொந்த மாநிலங்கள் அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு, பல மாநில அரசுகள் கோரிக்கைவிடுத்துள்ளதே, இதை மத்திய அரசு பரிசீலிக்கிறதா என்ற நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா, இப்போதைக்கு, பேருந்துகளைப் பயன்படுத்த மட்டுமே உத்தரவு உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+