17-வது லோக்சபா: 222 மசோதாக்கள் அறிமுகம்- அமளியால் 387 மணி நேரம் சபை முடக்கம், 11 மசோதாக்கள் வாபஸ்!
டெல்லி: 17-வது லோக்சபாவில் மொத்தம் 222 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன; 11 மசோதாக்கள் வாபஸ் பெறப்பட்டன. சபையில் அமளி காரணமாக 387 மணி நேரம் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
17-வது லோக்சபாவின் இறுதி கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. 17-வது லோக்சபா தொடர்பாக சில முக்கிய அம்சங்கள்:

*17-வது லோக்சபாவானது மொத்தம் 274 நாட்கள் 1354 மணி நேரம் லோக்சபா செயல்பட்டுள்ளது. லோக்சபாவின் செயல்பாடுகள் என்பது 97% ஆகும். 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்த ஆட்சிகளில் இது மிக அதிகமானது.
*17-வது லோக்சபாவில் மொத்தம் 222 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
17-வது லோக்சபாவில் மொத்தம் 202 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
விவசாயிகள் தொடர்பான மசோதாக்கள் உள்ளிட்ட 11 மசோதாக்கள் வாபஸ் பெறப்பட்டன.
17-வது லோக்சபாவில் மொத்தம் 540 எம்பிக்கள் விவாதங்களில் பங்கேற்றனர்.
முடிவடைந்த 17-வது லோக்சபாவின் ஜீரோ ஹவரில் 5,568 பிரச்சனைகள் எம்பிக்களால் எழுப்பப்பட்டன
17-வது லோக்சபாவின் நாடாளுமன்ற குழுக்களின் 69% பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளன.
லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி, பாஜக எம்பிக்களின் குறுக்கீடுகளால் மொத்தம் 387 மணிநேரம் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
17-வது லோக்சபாவுக்கு 16 நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் லோக்சபாவுக்கு வருகை தந்தனர்
17-வது லோக்சபாவின் 42 குழுக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டன
17-வது லோக்சபா காலத்தில்தான் இதுவரை இல்லாத வகையில் எதிர்க்கட்சிகளின் 146 எம்.பிக்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
2023-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து வண்ணப் புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது
அவதூறு வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டு பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் வழங்கப்பட்டது
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
17-வது லோக்சபாவில்தான் முத்தலாக் தடை சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தந்த 370-வது பிரிவு ரத்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, குடியுரிமை திருத்த மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.
17-வது லோக்சபா காலத்தில்தான் புதிய நாடாளுமன்றம் சர்ச்சைகளுக்கு இடையே கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
17-வது லோக்சபா காலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சபை நடவடிக்கைகள் முடக்கப்பட்டு இருந்தன.
17-வது இறுதி கூட்டத் தொடரில் பேசிய பிரதமர் மோடி, : உறுப்பினர்களின் கூட்டு முயற்சி, மக்களவைத் தலைவரின் திறமை மற்றும் உறுப்பினர்களின் விழிப்புணர்வு ஆகியவை 17-வது மக்களவையின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டை 97 சதவீதமாக உயர்த்தியதற்கு காரணம் என்றார். மேலும் காலாவதியான 60-க்கும் மேற்பட்ட சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. 18-வது மக்களவையின்போது செயல் திறனை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று உறுப்பினர்கள் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். 17வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரில் 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு சாதனை என்றார். அத்துடன் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம், அரசியலமைப்பின் முழு மகிமை வெளிப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயம் என்றும் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.


Click it and Unblock the Notifications
