ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்:லோக்சபா, ராஜ்யசபாவில் எத்தனை மணி நேர விவாதம் தெரியுமா?
டெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது லோக்சபாவில் 18 மணிநேரமும் ராஜ்யசபாவில் 21 மணிநேரமும் விவாதங்கள் நடைபெற்றன. இரு சபைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விவாதங்களுக்கு பதிலளித்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து இரு சபைகளும் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: 18-வது லோக்சபாவின் உறுப்பினர்களாகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பு/ உறுதி மொழி ஏற்புக்காக ஜூன் 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டன. இந்த அமர்வில், 542 உறுப்பினர்களில் 539 பேர் பதவியும் உறுதிமொழியும் ஏற்றனர்.

இந்தப் பதவியேற்புக்காக லோக்சபா தற்காலிக சபாநாயகராக பர்துஹரி மெஹ்தாவைக் ஜனாதிபதி நியமித்தார். லோக்சபா சபாநாயகர் ஜூன் 26-ந் தேதி நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பு மூலம் ஓம் பிர்லா, லோக்சபா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நாளில், தமது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களைப் பிரதமர் நரேந்திர மோடி சபைக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
ஜூன் 27 அன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். அரசின் கடந்த கால சாதனைகளையும், தேச வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டங்களையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
ஜூன் 27 அன்று பிரதமர் மோடி, தமது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களை ராஜ்யசபாவுக்கு அறிமுகம் செய்தார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இரு சபைகளிலும் ஜூன் 28 அன்று தொடங்கியது. லோக்சபாவில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக இந்த விவாதத்தை ஜூலை 1 அன்றுதான் தொடங்க முடிந்தது. லோக்சபாவில் அனுராக் தாக்கூர், விவாதத்தை முன்மொழிந்தும், பன்சூரி சுவராஜ் வழிமொழிந்தும் பேசினார்கள். மொத்தம் 68 உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். 50-க்கும் அதிகமான உறுப்பினர்கள் தங்களின் உரைகளை அவையில் தாக்கல் செய்தனர். 18 மணி நேரத்திற்கும் கூடுதலான விவாதத்திற்கு பின், ஜூலை 2 அன்று பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றினார்.
ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை ஜூன் 28 அன்று சுதன்ஷு திரிவேதி முன்மொழிந்தும், கவிதா பட்டிதார் வழிமொழிந்தும் பேசினார்கள். விவாதத்தில் 76 உறுப்பினர்கள் பங்கேற்றனர். 21 மணி நேரத்திற்கும் அதிகமான விவாதத்திற்கு பின், பிரதமர் நரேந்திர ஜூலை 3-ல் பதிலளித்து உரையாற்றினார். இதனையடுத்து இரு சபைகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன. இவ்வாறு கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications