யுத்தத்துக்கு ரெடி.. திரும்ப வந்துட்டோம்னு சொல்லுங்க.. சமூக வலைதளங்களை அதிரவிட்ட 'கனிமொழி அணி'!
டெல்லி: 18-வது லோக்சபா கூட்டம் தொடங்கிய நிலையில் "இந்தியா" கூட்டணியின் பெண் எம்பிக்கள் கனிமொழி (திமுக), தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), காங்கிரஸ் (ஜோதிமணி), மஹூவா மொய்த்ரா (திரிணாமுல் காங்கிரஸ்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி) ஆகியோர் இணைந்து எடுத்துக் கொண்டு "The warriors are back ! 2024 vs 2019" என பதிவிட்ட படம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
கடந்த லோக்சபா கூட்டங்களில் கனிமொழி (திமுக), தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), காங்கிரஸ் (ஜோதிமணி), மஹூவா மொய்த்ரா (திரிணாமுல் காங்கிரஸ்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி) ஆகியோர் இணைந்தே பாஜகவுக்கு எதிராக அதிதீவிரமாக செயல்பட்டனர். இவர்களில் கனிமொழி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்; தமிழச்சி தங்கபாண்டியன் மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகள்; சுப்ரியா சுலே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகள், டிம்பிள் யாதவ், அகிலேஷ் யாதவின் மனைவி.

கனிமொழிக்காக வரிந்து கட்டிய சுப்ரியா: லோக்சபாவில் ஒவ்வொரு விவாதத்தின் போதும் இந்த 6 பேர் கொண்ட மகளிர் அணியினரின் பேச்சுகள் பெரும் கவனத்தை ஈர்த்தது. லோக்சபாவில் கடந்த 2022-ம் ஆண்டு விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் கனிமொழி எம்பி பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அப்போது அவரை பேசவிடாமல் பாஜக எம்பிக்கள் இடையூறு செய்து கொண்டே இருந்தனர். அப்போது அவர் அருகே அமர்ந்திருந்த சுப்ரியா சுலே ஆவேசமாக எழுந்து வரிந்து கட்டியபடி கனிமொழிக்கு ஆதரவாக உரத்து குரல் எழுப்ப சபையே ஆடிப் போனது. மஹூவா மொய்த்ரா எம்பி பதவி பறிப்பின் போதும் இப்படித்தான் 6 பேரும் ஒருமித்து குரல் கொடுத்தனர்.
ஒரே குரல்: இந்தி மொழி திணிப்பு, மாநிலங்கள் உரிமை பறிப்பு, மகளிர் உரிமை உள்ளிட்ட விவகாரங்களில் இந்த 6 பேரும் இணைந்தே குரல் கொடுத்தனர். ஒருவர் குரல் கொடுக்கும் போது மற்றவர்கள் அவருக்கு ஆதரவாக லோக்சபாவில் கரம் கோர்த்து முழக்கமிட்டனர்.
சுப்ரியா சுலே: சென்னையில் திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்ற போது சுப்ரியா சுலே, லோக்சபாவில் கனிமொழிக்கு ஆதரவாக தாம் செயல்பட்டதை நினைவுபடுத்தினார். அத்துடன் கனிமொழி வீட்டுக்குச் சென்று சுப்ரியா சுலே உள்ளிட்டோர் தாயார் ராஜாத்தி அம்மாள் தோள் மீது சாய்ந்து படம் எடுத்து பதிவிட்டிருந்ததும் பேசுபொருளாகி இருந்தது.
6 பெண் எம்பிக்களின் படங்கள்: தற்போதைய லோக்சபா தேர்தலிலும் இந்த 6 பேரும் வெற்றி பெற்று மீண்டும் எம்பிக்களாகி உள்ளனர். இந்த நிலையில் 18-வது லோக்சபா கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த 6 பெண் எம்பிக்களும் நேற்று கூட்டாக படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். 2019-ம் ஆண்டு எடுத்த படத்தையும் தற்போது எடுத்த படத்தையும் இணைத்து "The warriors are back ! 2024 vs 2019" என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் அனைவரும் பதிவிட்டிருந்தனர்.
திரும்ப வந்துவிட்டோம்: 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' ' யுத்த களத்துக்கு ரெடியாகிட்டோம்' "போராளிகள் மீண்டும் வந்துவிட்டோம்" என்கிற "இந்தியா' கூட்டணியின் 6 பெண் எம்பிக்களின் படங்கள்தான் சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications