ஷாக்கிங் பாஜக.. நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா.. மத்திய அரசுக்கு எதிராக திரண்ட 19 எதிர்க்கட்சிகள்
டெல்லி: வரும் 28ம் தேதி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை என 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்தியாவில் கடந்த 1927ம் ஆண்டு நாடாளுமன்றம் கட்டப்பட்டது. பின்னர் இது கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கமும் செய்யப்பட்டது. ஆனாலும், இதில் இடப்பற்றாக்குறை நீடித்து வருவதால் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2020ம் ஆண்டு புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி இதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார்.

அப்போதே பிரச்னை வெடித்தது. அதாவது அடிக்கல் நாட்டு நிகழ்வுக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை. எனவே இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன இதனைத் தொடர்ந்து தற்போது திட்டமிட்டவாறு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ்கள் அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் குடியரசு தலைவரின் பெயர் இடம்பெறவில்லை. இந்த புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடிதான் திறந்து வைக்கிறார்.
இதனை எதிரக்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. மட்டுமல்லாது இந்த கட்டிட திறப்பு விழாவில் தாங்களும் பங்கெடுக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தங்களது எதிர்ப்பையும், புறக்கணிப்பையும் தெரிவித்துள்ளன. இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓபிரையன் கூறுகையில், "நாடாளுமன்றம் என்பது பேறும் புதிய கட்டடம் மட்டும் இல்லை. பாரம்பரியம், மாண்புகள், மரபுகள் மற்றும் முன்னுதாரணங்கள் நிறைந்த அமைப்பு அது. நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் அடித்தளமாகும்.
இது எதுவும் புரியாமல் நான், எனது, என்னுடைய என சுயபெருமைகள பாடும் நிகழ்வாக மட்டும் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை நடத்த பிரதமர் முயல்கிறார். எனவே இதனால் இந்த கட்டிட திறப்பு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிக்கிறது" என்று கூறியுள்ளார். அதேபோல காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரித்த ராகுல் காந்தி,
"கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புறக்கணிக்கப்பட்டார். இது குடியரசுத் தலைவரின் அரசியலமைப்புச் சட்டப்படியான பங்களிப்பதை நிராகரிப்பதாகும். எனவே இப்போதாவது நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நிகழ்வுக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்பட வேண்டும்" என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்வில் திமுக பங்கேற்காது என்று தெரிவித்துள்ளது. இதனை அக்கட்சியின் எம்பி திருச்சி சிவா உறுதி செய்துள்ளார்.
அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்று கூறியுள்ளன. இதனை ரவிக்குமார் எம்பி உறுதி செய்துள்ளார். இது குறித்து கூறுகையில், "இந்த நிகழ்வை புறக்கணிக் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இதில் குடியரசுத்தலைவர் புறக்கணிக்கப்படுகிறார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இவர்தான் தலைவர். நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 79ல், நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் குடியரசுத் தலைவரை உள்ளடக்கியதுதான் இந்த அமைப்பு என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படி இருக்கையில் இவரை புறக்கணித்து இந்நிகழ்வை நடத்துவது ஏற்புடையது அல்ல. அதேபோல, இக்கட்டிடத்தை திறந்து வைக்கும் தேதியும் சர்ச்சைக்குரியதுதான். சாவர்க்கர் பிறந்த நாளில் இந்த கட்டிடம் திறப்பு விழா நடைபெறுகிறது. இதன் மூலம் ஆளும் கட்சிக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பது தெரிந்துக்கொள்ள முடிகிறது. ஏனெனில், சாவர்க்கர் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவரல்ல" என்று கூறியுள்ளார்.

அதேபோல மஜ்லிஸ் கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி கூறுகையில், "பிரதமர் ஏன் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும்? அவர் நிர்வாகத்தின் தலைவர், நாடாளுமன்றத்தின் தலைவர் அல்ல. நம்மிடம் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவைத் தலைவர் இந்த கட்டிடத்தை திறந்து வைக்கலாம். இது மக்களின் பணத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால், தனது நண்பர்களின் தனிப்பட்ட நிதியிலிருந்து ஸ்பான்சர் செய்து கட்டப்பட்டது போன்று மோடி ஏன் நடந்துகொள்கிறார்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
சிவசேனா (உத்தவ் தாக்ரே) எம்பியன பிரியங்கா சதுர்வேதியும் இது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். "அதிகாரம் கண்ணை மறைத்திருப்பதால் அரசியலமைப்பு ஒழுக்கக்கேட்டின் ஊற்றுக்கண்ணாக பாஜக மாறியுள்ளது. குடியரசுத் தலைவர்தான் நாடாளுமன்றத்தின் தலைவர். பிரதமர் என்பவர் அரசாங்கத்தின் தலைவர்தான். எனவே புதிய நாடாளுமன்றத் தொடக்க விழாவை நெறிமுறையின்படி குடியரசுத் தலைவர்தான் நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் பாஜக, 28ம் தேதி நாடாளுமன்றத்தை பிரதமரை வைத்து திறப்பதில் உறுதியாக இருக்கிறது. ஏற்கனவே நாடாளுமன்றத்தின் இணைப்பு கட்டிடங்களை பிரதமர்கள் திறந்து வைத்த வரலாறு இருக்கிறது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். மேலும், ஒன்றுமில்லாத விஷயத்தை காங்கிரஸ் ஊதி பெரியதாக்குவதாகவும் விமர்சித்துள்ளார். பாஜக எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத நிலையில், ஒட்டுமொத்தமாக 19 எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக இந்த விழாவில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்துள்ளன.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications