Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறக்க முடியுமா சரித்திரத்தை? ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசை 1999-ல் கவிழ்த்த ஜெயலலிதா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது காங்கிரஸ். இத்தருணத்தில் 24 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமராக வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அன்றைய பாஜக ஆட்சியையே ஜெயலலிதா கவிழ்த்த வரலாறு கண்முன்னால் வரத்தான் செய்கிறது.

தமிழ்நாடு அரசியல் களம்: 1999-ம் ஆண்டு வாஜ்பாய் அரசு ஒற்றை ஓட்டில் கவிழ்க்கப்பட்டதற்கு பின்னணி தமிழ்நாட்டு அரசியலில் இருந்து தொடங்குகிறது. 1991-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராஜீவ் காந்தி படுகொலை சூழலில் அண்ணா திமுக பிரம்மாண்ட வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வராக முதல் முறையாக பொறுப்பேற்றார். அவரது ஆட்சி மிக மோசமான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டது. இது 1996-ம் ஆண்டு தேர்தலில் எதிரொலித்தது.

1999 No-Confidence Motion- How Vajpayee govt defeated by One vote?

ஜெயலலிதா- கருணாநிதி: 1996-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அண்ணா திமுக- காங்கிரஸ் கூட்டணி வெறும் 4 இடங்களில்தான் வென்றது. திமுக- தமாகா கூட்டணி 221 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. தமிழ்நாட்டில் 1996-ல் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் முந்தைய அதிமுக ஆட்சிக்கால ஊழல்கள் தொடர்பாக சரமாரியாக வழக்குகள் பாய்ந்தன. சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. ஜெயலலிதாவும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

பாஜக- அதிமுக கூட்டணி: இந்தப் பின்னணியில் 1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம்பெற்றது. லோக்சபா தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி 30 இடங்களில் அமோக வெற்றியைப் பெற்றது. பிரதமராக பாஜக நிறுவனத் தலைவர் வாஜ்பாய் பதவி வகித்தார். அதிமுக ஆதரவுடன் மத்திய அரசு அமைக்கப்பட்டதால் டெல்லியின் ஒவ்வொரு முக்கிய முடிவுக்கும் ஜெயலலிதாவின் ஒப்புதல் தேவைப்பட்டது. ஒவ்வொரு நகர்வுக்கும் சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் போயஸ் பங்களாவுக்கு மத்திய அமைச்சர்கள் படையெடுக்க வேண்டிய நிலைமை இருந்தது.

டீ பார்ட்டி ஆட்சி கவிழ்ப்பு: 1999-ம் ஆண்டு டெல்லி அரசியலில் புதிய திருப்பமாக அதிமுக ஜெயலலிதா, பரம எதிரியான காங்கிரஸ் தலைவர் சோனியாவை டீ பார்ட்டியில் சந்தித்து பேசினார். இதற்கு ஏற்பாடு செய்தவர் அன்றைய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இந்த டீ பார்ட்டியின் விளைவாகத்தான் 1999-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுக்கான ஆதரவை அதிமுக திடீரென வாபஸ் பெற்றது. 13 மாதங்கள் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் அரசு, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொண்டது. 1996-ம் ஆண்டு 13 நாட்கள் பிரதமராக இருந்த வாஜ்பாய்-க்கு தமது ஆட்சி கவிழும் என தெரிந்திருந்தது. அப்போது 14 எம்.பிக்களை கொண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சி, ஆதரவு தருவதாக முதலில் அறிவித்தது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வாஜ்பாய் அரசுக்கு எதிராக வாக்களித்தது பகுஜன் சமாஜ் கட்சி. இதனால் வாஜ்பாய் அரசு ஒரே ஒரு ஓட்டில் 1999-ம் ஆண்டு ஏப்ரலில் ஆட்சியை இழந்தது.

2003-ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆனால் 1999-ம் ஆண்டு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்தார். அப்போது 2003-ம் ஆண்டு காங்கிரஸ் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. அத்தீர்மானத்துக்கு எதிராக 312 வாக்குகள் பெற்று வாஜ்பாய் அரசு வென்றது. நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 186 வாக்குகள்தான் கிடைத்தன. அப்போது அண்ணா திமுக, நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+