நாடு முழுவதும் கொத்து கொத்தாக பரவும் கொரோனா - 2.17 லட்சம் பேர் பாதிப்பு - 1185 பேர் மரணம்

நாடு முழுவதும் 2,17,353 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது நாளாக 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1185 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,17,353 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,91,917 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1185 பேர் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 1,74,308 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

உலகமே கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரைக்கும் 14 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சில மாதங்கள் வீரியம் குறைந்திருந்த கொரோனா மீண்டும் இரண்டாவது அலையாக வீசத் தொடங்கியுள்ளது.

2.17 Lakh Fresh Covid Cases In India, 1,185 Deaths In 24 Hours

பல மாநிலங்களில் கொத்துக்கொத்தாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வட மாநிலங்களில் கொத்துக்காக ஏற்படும் கொரோனா மரணங்களால் சுடுகாடுகள், இடுகாடுகளில் பிணக்குவியல்கள் இரவு பகலாக வந்து கொண்டிருக்கின்றன. மருத்துவமனை பிணவறைகளில் சடலங்களை வைக்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமல் வாசலில் ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் ரெம்டெசிவர் மருத்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருந்து வாங்க நாள்கணக்கில் வரிசையில் நிற்கின்றனர்.

கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் விடுமுறைகள் இன்றி ஓய்வில் உழைக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 1,42,91,917 கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1185 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,74,308 பேராக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து 1,25,47,866 பேர் குணமடைந்துள்ளனர்.15,69,743 பேர் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,72,23,509 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+