டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேல பறக்குற மாதிரியே இருக்கு.. முழு போதையில் விமானம் ஓட்ட வந்த விமானி..ஏர் இந்தியா பயணிகள் திக்திக்!

ஏர்இந்தியாவை சேர்ந்த விமானி ஒருவர், முழு போதையில் விமானத்தை ஓட்ட முயன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    போதையில் இருந்த விமானிகள் மீது நடவடிக்கை- வீடியோ

    டெல்லி: ஏர்இந்தியாவை சேர்ந்த விமானி ஒருவர், முழு போதையில் விமானத்தை ஓட்ட முயன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    லண்டனில் இருந்து அந்த ஏர்இந்தியா ஏஐ-111 விமானம் டெல்லி நோக்கி கிளப்பி இருக்கிறது. விமானத்தின் துணை விமானி ஏற்கனவே வந்து விமானிக்காக காத்திருந்துள்ளார்.

    300 பயணிகள் அந்த விமானத்தில் இருந்துள்ளனர். அதன்பின் விமானி ஏ கே கத்பலையா தாமதமாக அந்த விமானத்திற்குள் வந்துள்ளார்.

    பெண் விவகாரம்.. கை, கால்களை கட்டி அடித்த கிராம மக்கள்.. கடலூர் அருகே பரபரப்பு பெண் விவகாரம்.. கை, கால்களை கட்டி அடித்த கிராம மக்கள்.. கடலூர் அருகே பரபரப்பு

    சோதனை முடிவு

    சோதனை முடிவு

    இதையடுத்து எப்போதும் விமானம் எடுப்பதற்கு முன் செய்யப்படுவதை போல இருவருக்கும் ஆல்கஹால் சோதனை செய்து இருக்கிறார்கள். இதில் விமானி ஏ கே கத்பலையா முழு போதையில் இருப்பது தெரிய வந்தது. இரண்டாவது முறை சோதனை செய்து அவர் போதையில் இருப்பதை உறுதி செய்தனர்.

    தடை செய்தனர்

    தடை செய்தனர்

    இதனால் உடனடியாக அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார். அவரை விமான நிலைய அதிகாரிகள் விசாரித்தனர். இதையடுத்து அவர் விமானம் ஓட்ட தடைவிதிக்கப்பட்டது. 3 வருடம் பயணிகள் விமானம் ஓட்ட அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

    இன்னொரு விமானி

    இன்னொரு விமானி

    அதே சமயத்தில் டெல்லியில் இருந்து பாங்காக் சென்று இன்னொரு ஏர்இந்தியா விமானமும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. அந்த விமானத்தின் துணை விமானி ஆல்கஹால் சோதனையில் ஈடுபடாமல் சென்ற காரணத்தால் விமானம் உடனடியாக மீண்டும் டெல்லிக்கு திரும்பி வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அவருக்கு தடை

    அவருக்கு தடை

    அவர் டெல்லி விமானம் நிலையம் வந்த உடன் சோதனை செய்யப்பட்டார். இதையடுத்து பயணிகள் வேறு விமானம் மூலம் திருப்பி பாங்காக் அனுப்பப்பட்டனர். ஆல்கஹால் சோதனையை செய்யாமல் விமானத்தை ஓட்டுவது தவறு என்பதால் அவருக்கு மூன்று மாதம் விமானத்தை ஓட்ட தடை விதிக்கப்பட்டது.

    English summary
    2 Air India Pilots grounded in a Single day after failed Alcohol Test.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X