அற்ப விஷயத்துக்காக இரு குடும்பங்கள் சண்டை.. மறக்கவே முடியாதபடி.. விசித்திரமான தீர்ப்பளித்த ஹைகோர்ட்
டெல்லி: ஒரு அற்ப பிரச்சனை செய்த இரு குடும்பத்தினரால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். கடைசியில் போலீஸ், கோர்ட் வரை விஷயம் சென்றது என்ன பிரச்சனை என்று கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம், அதனை கேட்டு கோபம் அடைந்ததுடன், அவர்கள் இரு குடும்பத்தினரும் தலா 200 மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த அர்பித் ஜெய்ஸ்வால் கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனுவில் கூறியிருந்ததாவது: ஒரு அரசியல் கட்சி வேட்பாளரின் சார்பில் போர்வை வழங்கப்பட இருக்கிறது என்றும் அதற்காக அடையாள ஆவணம் தருமாறும் வினோத் ஜா என்பவர் தனது மகனுடன் வந்தார்.

அப்போது நான் அவரிடம் வேறுகட்சியைச் சேர்ந்தவன் என்று கூறினேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவர்கள் எங்கள் குடும்பத்தினரை கடுமையாக தாக்கினர். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டம் என்று வலியுறுத்தினார்.
இதனிடையே வினோத் ஜாவும் தனியாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அரசியல் கட்சி ஒன்றில் இருக்கிறேன். அந்த கட்சி சார்பில் போர்வை வழங்க அடையாள ஆவணத்தை கேட்டேன். அப்போது ஜெய்ஸ்வால் குடும்பத்தினர் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த இரு வழக்குகளையும் நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வந்தார். இந்த வழக்கில் அவரது பிரச்சனைகள் குறித்து விசாரித்து நீதிபதி தினேஷ் குமார் தீர்ப்பளித்தார்.
நீதிபதி தினேஷ் குமார் கூறும் போது,. சண்டையிட்ட விவகாரத்தில் இரு வீட்டாரும் எவ்வித கட்டாயமோ அச்சுறுத்தலோ இன்றி, தன்னிச்சையாக தங்களுக்கு இடையிலான பிரச்சினையை கடந்த ஜனவரி மாதம் சமரச மையத்தில் முடித்துக் கொண்டதாகக் கூறியிருக்கிறார்கள். எனவே, இந்த இரு குடும்பத்தினரும் ஒருவர் மீது ஒருவர் தாக்கல் செய்த வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது.
எனினும், இந்த இரு குடும்பத்தினர் இடையிலான எதிர்மறை சிந்தனை மாற வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக இருகுடும்பத்தினரும் சமுதாய சேவை செய்ய வேண்டும் என நான் கருதுகிறேன். அதன்படி அந்த இரு குடும்பத்தினரும் தங்களுடைய பகுதியில் தலா 200 மரங்களை நட்டு அவற்றை 5 ஆண்டுகளுக்கு கண்டிப்பாக பராமரிக்க வேண்டும்.
இந்த உத்தரவு சரியான முறையில் செயல்படுத்தப்பட்டதா என்பது குறித்து வரும் நவம்பர் மாதம் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் எந்த இடத்தில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்க வேண்டும். அந்த 2 குடும்பத்தினருக்கும் விசாரணை அதிகாரி இதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டும்" இவ்வாறு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications