உலகப் புகழ் பெற்ற 100 மருத்துவக் கல்லூரிகள்.. 6 இந்தியாவில்.. அதில் 2 தமிழ்நாட்டில்..1 புதுவையில்.. மாஸ்!
டெல்லி: உலகில் உள்ள 100 சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் இந்தியாவின் 6 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. அந்த 6-இல் இரு கல்லூரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவையாகும். அது போல் புதுவை ஜிப்மர் கல்லூரியும் இடம்பெற்றுள்ளது.
CEO World என்ற புத்தகம் ஆண்டுதோறும் உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு உலகின் 100 சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவை சேர்ந்த 6 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் இரண்டு தமிழகம், ஒன்று புதுவையை சேர்ந்தவையாகும்.

ட்விட்டர்
இது குறித்து ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் ஒவ்வொரு இந்தியருக்கு மிகவும் பெருமையான தருணம். உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளில் இந்தியாவை சேர்ந்த 6 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

ஜிப்மர்
அந்த 6 கல்லூரிகளில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 23 ஆவது இடத்திலும் புனேவில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரி 34 ஆவது இடத்திலும் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக் கல்லூரி 49 ஆவது இடத்திலும் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி 59 ஆவது இடத்திலும் உள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரி
அது போல் சென்னை மருத்துவக் கல்லூரி 64 ஆவது இடத்தையும் வாரணாசியில் இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் பிஎச்யூ 72 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழகமும் மேயோ கிளீனிக் மருத்துவக் கல்லூரி 7ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

பதில் ட்வீட்
மேலும் அமைச்சரின் ட்வீட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மருத்துவ கட்டமைப்புகளில் சிறந்த நாடாக இந்தியா திகழ வழி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். இதற்கு நெட்டிசன்கள் பதிலளித்துள்ளார். ஜாவடேகர் அவர்களே, எய்ம்ஸ் மருத்துவமனை அந்த மருத்துவமனையின் இயக்குநர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரின் கூட்டு முயற்சிதான் இது. பிரதமர் ஒன்றும் செய்துவிடவில்லை என்கிறார் ஒரு வலைஞர்.

காங்கிரஸ் உருவாக்கிய கல்லூரிகள்
ஜாவடேகர் அவர்களே இந்த 6 மருத்துவக் கல்லூரிகளும் காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்டவை. உங்களால் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி எங்கே இருக்கிறது என்கிறார் இந்த வலைஞர்.

நேருவால் உருவாக்கப்பட்டவை
கடந்த 1956 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் டெல்லியில் தொடங்கப்பட்டது எய்ம்ஸ் மருத்துவமனை.
1948 ஆம் ஆண்டு புனே ராணுவ மருத்துவக் கல்லூரியும் நேருவால் உருவாக்கப்பட்டதுதான்.
அது போல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை பிரான்ஸ் அரசால் உருவாக்கப்பட்டு நேருவால் வளர்ச்சி கண்டது. வாரணாசி ஐஎம்எஸ் மருத்துவமனை 1960 ஆம் ஆண்டு நேரு அரசால் உருவானது.
மோடி அவர்களே உங்கள் சாதனைகளை பட்டியலிடுங்களேன்!
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம்












Click it and Unblock the Notifications