மோடி அமைச்சரவை விரிவாக்கம்- 20 புதுமுகங்கள்... மே.வங்கம், உ.பி, மகாராஷ்டிராவுக்கு முக்கியத்துவம்?
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஓரிரு நாட்களில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் 20 புதுமுகங்கள் இடம்பெறக் கூடும் என தெரிகிறது.
பிரதமர் மோடி தமது அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக கடந்த சில வாரங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக பொதுச்செயலாளர் சந்தோஷ் உள்ளிட்டோருடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த அமைச்சரவை மாற்றத்தில் இதுவரை இல்லாத வகையில் 20 புதுமுகங்கள் இடம்பெற உள்ளனராம். சட்டசபை தேர்தலை அடுத்த ஆண்டு எதிர்கொள்ள இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் முக்கியத்துவம் தரப்படுமாம்.

மே.வங்கத்துக்கு முக்கியத்துவம்
மேலும் பாஜகவில் இருந்து திரிணாமுல் காங்கிரஸுக்கு பெரும் எண்ணிக்கையில் சீனியர்கள் கட்சி தாவி வரும் மேற்கு வங்கத்துக்கும் அமைச்சரவை மாற்றத்தில் முக்கிய இடம் இருக்கிறதாம். அதேபோல் மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர்களுக்கும் புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாம்.

3 பேருக்கு அழைப்பு
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்த்து பாஜக ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. அஸ்ஸாம் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்த போதும் கட்சி தலைமை கேட்டுக் கொண்டதால் விட்டுக் கொடுத்தவர் சர்பானந்தா சோனாவால். மகாராஷ்டிராவின் பாஜகவின் முகமாக இருப்பவர் நாராயண் ரானே. இந்த மூவருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்
மேலிடத்தில் இருந்து அழைப்பு வந்தததால் இந்த மூவரும் டெல்லி சென்றுள்ளனர். மேலும் ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் தற்போதைய அமைச்சரவையில் இடம் அளிக்க வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் ஆந்திராவில் வலுவாக கால் பதிக்கலாம் என்பது பாஜகவின் திட்டம்.

தமிழகத்துக்கு?
தமிழகத்தில் அதிமுகவின் ரவீந்தரநாத் குமார், பாமகவின் அன்புமணி ராமதாஸ், த.மா.கா.வின் ஜி.கே.வாசன் ஆகியோரும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அதுவும் அன்புமணி ராமதாஸுக்கு சுகாதாரத்துறை இலாகாவை அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அமைச்சரவையில் 81 பேர்
பிரதமர் மோடி தலைமையிலான கேபினட்டில் தற்போது 53 அமைச்சர்கள் உள்ளனர். அமைச்சர்கள் எண்ணிக்கை 81 ஆக அதிகரிக்கலாம் என்பதால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications