இந்த டாடா நிறுவனத்தில் ரூ. 2,500 போட்டிருந்தால் போதும்.. இன்று நீங்க லட்சாதிபதி! இது சூப்பரா இருக்கே
டெல்லி: பங்குச்சந்தையில் முதலீடு செய்வது குறித்து பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால், பலருக்கும் அந்த பொறுமை இருக்காது. ஆனால், பொறுமையாக இருந்தால் இதில் பெரிய தொகையைக் கூட ஈஸியாக சம்பாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இங்கே ஒரு நிறுவனம் இருக்கிறது. இந்த டாடா நிறுவனத்தில் நீங்கள் வெறும் ரூ.2500 போட்டிருந்தால் இன்று நீங்கள் லட்சாதிபதி.. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பங்குச்சந்தையில் முதலீடு செய்து ஈஸியாக பணக்காரன் ஆக வேண்டும் எனப் பலருக்கும் ஆசை இருக்கும். பங்குச்சந்தையைப் பலரும் டி20 கிரிக்கெட் போல நினைக்கிறார்கள். உள்ளே போய் அதை வாங்கி, இதை விற்றால் பணம் சம்பாதித்துவிட முடியும் என நினைக்கிறார்கள்.

முதலீடு: ஆனால், உண்மையில் பங்குச்சந்தை என்பது டெஸ்ட் போட்டி போல மிகப் பொறுமையாக இருக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு பொறுமையாக இருக்கிறோமோ அவ்வளவு லாபம் கிடைக்கும். அப்படி தான் இங்கே இப்போது டாடாவுக்கு சொந்தமான ஒரு நிறுவனம் நின்று நீண்ட காலம் விளையாடி இருக்கிறது. மேலும், அது மிகப் பெரிய சாதனையையும் படைத்துள்ளது.
டாடா நிறுவனம்: ஐடி துறையில் டாடாவின் நிறுவனமான டிசிஎஸ் முதன்முதலில் கடந்த 2004ம் ஆண்டு ஆக.25ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அதாவது டிசிஎஸ் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் பங்குகளைத் திரும்ப வாங்குதல், டிவிடெண்ட் மற்றும் போனஸ் என்று பல்வேறு வழிகளில் முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய லாபத்தைக் கொடுத்த நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் இருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் இதன் சந்தை மதிப்பு ரூ.41,000 கோடியிலிருந்து இப்போது ரூ.16.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 20 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் வருமானமும் சுமார் 20 மடங்கு அதிகரித்துள்ளது. இப்போது டிசிஎஸ் நிறுவனத்தின் வருமானம் 29.1 பில்லின் டாலராக இருக்கிறது.
லாபம்: டிசிஎஸ் நிறுவனம் இதுவரை 5 முறை பங்கு திரும்பப் பெறுதலை (share buybacks) அறிவித்துள்ளது. இந்த ஷேர் பை பேக்கில் சந்தையில் வர்த்தகமாகும் விலையை விட கூடுதல் விலைக்கு நிறுவனங்களே பங்குகளை வாங்கிக் கொள்ளும். இதன் மூலம் பங்குகள் குறைவதால் மதிப்பு மேலும் உயரும். கடைசியாகக் கடந்த 2023 நவ. மாதம் பை பேக் செய்திருந்தார்கள்.
அதேபோல டிசிஎஸ் நிறுவனம் இதுவரை 3 போனஸ் பங்குகளையும் வழங்கியுள்ளது. கடைசியாக 2018ல் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் வழங்கப்பட்டது. கடந்த 2018இல் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு $100 பில்லியனை தாண்டியது. அதன் பிறகு வெறும் 4 ஆண்டுகளில் அது இரண்டு மடங்கு அதிகரித்தது. இந்த பங்கு முதலில் பட்டியலிடப்பட்ட போது ரூ. 106.25க்கு வர்த்தகமானது. அதன் பிறகு பல போனஸ்கள், பல ஷேர் பை பேக்கிற்கு பிறகும் கூட இப்போது ரூ.4500 என்ற ரேஞ்சில் வத்தகமாகி வருகிறது.
லட்சாதிபதி: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் வெறும் ரூ.10 ஆயிரத்தை இந்த பங்கில் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு இப்போது ரூ.4.23 லட்சமாக இருந்து இருக்கும். இத்துடன் டிவிடெண்ட், போனஸ் எல்லாம் சேர்த்தால் அது எங்கோ போய் இருக்கும். அதாவது ரூ.2500 முதலீடு செய்திருந்தாலே நீங்கள் லட்சாதிபதி ஆகி இருப்பீர்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் இது 20 சதவீத CAGRஐ வழங்குகிறது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கூட முறையே 14.8 சதவிகிதம் மற்றும் 15.5 சதவிகிதம் வருடாந்திர CGARஐ மட்டும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications