இன்னும் 2000 ரூபாய் நோட்டு மாத்தலையா? ரிசர்வ் வங்கி போட்ட மேஜர் உத்தரவு..இன்றே கடைசி.. உடனே முடிங்க
டெல்லி: 2000 ரூபாயை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.. எனவே, உங்கள் கையிலுள்ள 2000 ரூபாய் மாற்றிக்கொள்ள இன்றே கடைசி நாள் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது.. இதையடுத்து, இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணியும் துரிதமாக ஆரம்பமானது..

அவகாசம்: செப்டம்பர் 30-ந் தேதி வரை இதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.. ஆரம்பத்தில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி குறைவாகவே இருந்தது.. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அதிக அளவில் டெபாசிட் செய்யப்படுவதாக கூறப்பட்டன..
மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் குறித்த பரிசீலனை எதுவுமே அரசிடம் இல்லை" என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கம் தந்திருந்தார்..
இதனிடையே, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து கூறும்போது, "2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது பெரும் பலன் அளிக்கும்.. அத்துடன், 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக அரசு எடுத்த முடிவு உபரி பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளது.. 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டதால் பணப்புழக்கமும் அதிகரித்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
டெபாசிட்: அதுமட்டுமல்ல, இதில், நாட்டிலுள்ள சாமானிய பொதுமக்களை காட்டிலும், தொழிலதிபர்கள்தான் அதிக அளவில் ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்திருக்கிறார்களாம். அதன்படி, 40 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் வணிகர்களிடமிருந்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக, ஏற்கனவே அறிக்கை ஒன்று வெளியாகி, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.
இந்நிலையில், 2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது... டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30-ம் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
தொடர் விடுமுறை: அதுமட்டுமல்லாமல், சனி, ஞாயிறு, காந்தி ஜெயந்தி என, தொடர் விடுமுறை வந்தால், பல்வேறு நிறுவனங்கள் 2000 ரூபாய் வாங்குவதை நிறுத்துவதாக அறிவிப்பு விடுத்தன.
அரசு பேருந்துகளிலும், ஆம்னி பேருந்துகளிலும், பெட்ரோல் பங்க்குகளிலும் 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றி பலரும் டிக்கெட் பெற்று வந்த நிலையில், செப்டம்பர் 28ம் தேதிக்கு பிறகு பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற இன்று ஒருநாள் மட்டுமே காலக்கெடு உள்ளது.
கால அவகாசம்: இதற்கு பிறகும், கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்று இதுவரை உறுதியாக தெரியவில்லை.. ஒருவேளை அவகாசம் நீட்டிக்கப்படாவிட்டால், 2000 ரூபாய் நோட்டு செல்லாமல் போகும் அபாயமும் ஏற்படலாம் என்பதால், கையிலுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவுறுத்தியிருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications