காந்தியவாதி டாக்டர். பாலமுரளி பாலாஜிக்கு "2023-ம் ஆண்டுக்கான காந்தி சேவா ரத்னா விருது"
2023 ஆம் ஆண்டுக்கான காந்தி சேவா ரத்னா விருது காந்தியவாதியும் தொழில்நுட்பவியலாளருமான டாக்டர். பாலமுரளி பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
டெல்லி: டெல்லியில் உள்ள இந்திய ஆடிட்டோரியத்தின் அரசியல் அமைப்பு கிளப்பில் நாட்டின் சிறந்த ஆளுமைகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான காந்தி சேவா ரத்னா விருது பிரபலமான காந்தியவாதியும் தொழில்நுட்பவியலாளருமான டாக்டர். பாலமுரளி பாலாஜிக்கு வழங்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக காந்திய கொள்கைகள் தொடர்பான பல்வேறு ஆய்வுகளையும் விரிவான ஆராய்ச்சிகளையும் இவர் செய்து வருகிறார். பல கட்டுரைகளையும் புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.

டெல்லியை சேர்ந்த "ஊழலுக்கு எதிரான உலக மக்கள் கவுன்சில் என்ற அமைப்பு" கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் காந்தி சேவா விருதினை வழங்கி வருகிறது. கலை, இலக்கியம், சமூகம் மற்றும் அரசியல் என பல்வேறு துறைகளில் சாதனைகள் புரியும் மக்களுக்கு இந்த விருதினை ஊழலுக்கு எதிரான உலக மக்கள் கவுன்சில் அமைப்பு வழங்கி வருகிறது. கடந்த மார்ச் 12 ஆம் தேதி டெல்லியில் உள்ள இந்திய ஆடிட்டோரியத்தின் அரசியல் அமைப்பு கிளப்பில் நாட்டின் சிறந்த ஆளுமைகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை மகராஷ்டிரா முன்னாள் முதல்வர் மகாதேவ் ஜன்கர் தொடங்கி வைத்தார். பாலிவுட் கலைஞர்களான ஷாந்திபிரியா, சந்தீப் சோபார்கர் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சினான அனைத்து ஏற்பாடுகளையும் WAC நிறுவனர் விஜய் பஜாஜ் மேற்கொண்டு இருந்தார்.

பிரபலமான காந்தியவாதியும் தொழில்நுட்பவியலாளருமான டாக்டர். பாலமுரளி பாலாஜிக்கு 2023 ஆம் ஆண்டுக்கான காந்தி சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக காந்திய கொள்கைகள் தொடர்பான பல்வேறு ஆய்வுகளையும் விரிவான ஆராய்ச்சிகளையும் இவர் செய்து வருகிறார். பல கட்டுரைகளையும் புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.

முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு காந்திய தத்துவம், அமைதி, மனிதநேயம் ஆகியவற்றில் கவுரவ டாக்டர் பட்டமும் நேபாளத்தில் உள்ள காந்தி அமைதி பவுண்டேஷனால் டாக்டர் பாலமுரளி பாலாஜிக்கு வழங்கப்பட்டது. எம்.பி.ஏ பட்டதாரியான இவர் டெக்னோ - காந்தியன் சென்டர் என்ற தன்னார்வ அமைப்பையும் நிறுவி 2008 ஆம் ஆண்டு முதலாக காந்திய கொள்கைகளை பரப்புவதோடு சமூக பணிகளையும் செய்து வருகிறார்.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications