150 நாட்கள்.. 3500கி.மீ! காந்தி நினைவு நாளில் முடிவடையும் பாரத் ஜடோ யாத்திரை! 21 கட்சிகளுக்கு அழைப்பு
டெல்லி: ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாரத் ஜடோ யாத்திரையானது வரும் 30ம் தேதி ஜம்முவின் ஸ்ரீநகரில் முடிவடையவுள்ள நிலையில், இந்த நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க 21 கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கிறது.
கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி, பல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு விலகியது, பஞ்சாபில் ஆட்சியை இழந்தது என காங்கிரஸ் கட்சிக்கு தொடர் தோல்விகள் ஏற்பட்ட நிலையில் கட்சியை காப்பாற்ற புதிய தலைமை வேண்டும் என்று அதன் மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதையெல்லாம் பார்த்த பாஜக, "காங்கிரஸின் கதை முடிந்துவிட்டது" என்று கூறியது. அதற்கேற்றார் போல காங்கிரஸ் வலிமையாக இருந்த இடங்களை ஆம் ஆத்மி மெல்ல கைப்பற்றியது.
இந்நிலையில், இந்த நிறைவு விழா ஜம்முவின் ஸ்ரீ நகரில் நடைபெற உள்ள நிலையில், இதில் ஒருமித்த கருத்துகொண்ட சுமார் 21 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், "ஸ்ரீநகரில் 30ம் தேதி நடபெற உள்ள நிறைவு விழாவுக்கு வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். வெறுப்பு வன்முறைக்கு எதிராக போராடி உயிர்நீத்த மகாத்மா காந்தியின் நினைவு நாளில் இந்த நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே இந்நிகழ்ச்சியை காந்தியின் நினைவுகளுக்கு அர்ப்பணிக்கிறோம்.

யாத்திரை
தற்போது வரை கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி என சுமார் 10 மாநிலங்கள் 52 மாவட்டங்கள் என 3,400 தூரம் வரை பயணித்து பஞ்சாப் வரை யாத்திரை வந்திருக்கிறது. இன்று பஞ்சாபின் லுதியானா பகுதியில் இன்று அதிகாலை முதல் யாத்திரை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் பயணித்து வரும் இந்த யாத்திரையில் ராகுல் காந்தி உடன் அரசியல் தலைவர்கள், முன்னாள் அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என பலர் பங்கேற்று வருகின்றனர். இந்த யாத்திரை முடிவடைய இன்னும் 107 கி.மீ மட்டுமே பாக்கி இருக்கிறது.

நிறைவு விழா
இந்நிலையில், இந்த நிறைவு விழா ஜம்முவின் ஸ்ரீ நகரில் நடைபெற உள்ள நிலையில், இதில் ஒருமித்த கருத்துகொண்ட சுமார் 21 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், "ஸ்ரீநகரில் 30ம் தேதி நடபெற உள்ள நிறைவு விழாவுக்கு வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். வெறுப்பு வன்முறைக்கு எதிராக போராடி உயிர்நீத்த மகாத்மா காந்தியின் நினைவு நாளில் இந்த நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே இந்நிகழ்ச்சியை காந்தியின் நினைவுகளுக்கு அர்ப்பணிக்கிறோம்.

அழைப்பு
நெருக்கடியான இந்த சூழலில் முக்கிய பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் பாரத் ஜடோ யாத்திரை வலிமையான குரலாக உருவெடுத்துள்ளது. எனவே, இதில் நீங்கள் பங்கேற்பின் அது யா்த்திரையின் நோக்கத்திற்கு வலு சேர்க்கும். நாடு பொருளாதார, சமூக, அரசியல் சிக்கலை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படும் நிலையில் லட்சக்கணக்கானோரை இந்த யாத்திதை ஒருங்கிணைக்கிறது. எனவே இதில் நீங்கள் பங்கேற்பீர்கள் என்று நம்புகிறேன். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்றுள்ளனர். மக்களுடனான நேரடி உரையாடல்தான் யாத்திரையின் சாதனை" என்று கூறியுள்ளார்.

மற்றொரு யாத்திரை
இந்த யாத்திரை 30ம் தேதியுடன் முடிவடைந்துவிடும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. எனவே இடையில் மற்றொரு பயணத்தை காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால் இது ராகுல் காந்தி தலைமையில் அல்லாமல் மல்லிகர்ஜூன கார்கே தலைமையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த இரண்டு யாத்திரைகளும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் என்று காங்கிரஸ் வலுவாக நம்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications