அதானிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. AWL அக்ரி பிசினஸில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்த வருவாய்
டெல்லி: அதானி மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த வில்மர் இன்டர்நேஷனல் சேர்ந்து நடத்தும் எடபிள்யூஎல் அக்ரி பிசினஸ் நிறுவனம் தற்போதைய நிதியாண்டின் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாயாக ரூ.17,059 கோடியை ஈட்டி உள்ளது.

நம் நாட்டின் முன்னணி தொழிலதிபரான கவுதம் அதானி கடந்த 1999ம் ஆண்டில் அதானி வில்மர் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கினார். அதானி என்டர்பிரைசஸ் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த வில்மர் இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கின. தற்போது இந்த நிறுவனம் ஏடபிள்யூஎல் அக்ரி பிசினஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் சமையல் எண்ணெய், அரிசி, பருப்புகள், மாவு, சர்க்கரை, சோயாபீன், உணவுகள், சானிடைசர், சோப்பு உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தான் ஏடபிள்யூஎல் அக்ரி பிசினஸ் நிறுவனம் தற்போதைய நிதியாண்டு 26ன் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாயை ஈட்டி உள்ளது.
அதன்படி இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்துக்கு ரூ.17,059 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 21 சதவீதம் அதிகமாகும். இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் சமையல் எண்ணெய் தான். இந்த நிறுவனத்தின் சமையல் எண்ணெய் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 26 சதவீதம் அதிகரித்து ரூ.13,415 கோடியாக உள்ளது. இது நிறுவனத்தின் மொத்த வருவாயில் 78.6 சதவீதமாகவும், மொத்த அளவில் 61 சதவீதமாகவும் உள்ளது.
அதேபோல் நிறுவனத்தின் பிற பிரிவுகளை எடுத்து கொண்டால் உணவு பிரிவில் வருவாய் 4 சதவீதம் உயர்ந்து ரூ.1,414 கோடியாக இருந்தது. சமீபத்திய விலை உயர்வை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் வருவாயில் 8 சதவீதமாகவும், மொத்த அளவில் 16 சதவீதமாகவும் உள்ளது. மேலும் தொழில்துறை அத்தியாவசிய பொருட்களுக்கான வணிகம் 12 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இது மொத்த வருவாயில் 12 சதவீத பங்களிப்பு செய்துள்ளது.
இந்த நிறுவனம் தனது சமையல் எண்ணெய் பிரிவில் இருந்து கிடைக்கும் அதிகப்படியான வருவாயை பயன்படுத்தி உணவு மற்றும் எஃப்எம்சிஜி வணிகத்தை விரிவுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமையல் எண்ணெய் பிரிவை எடுத்து கொண்டால் ஆண்டுதோறும் சுமார் ரூ.1,200 - ரூ.1,500 கோடி வரை பணப்புழக்கத்தை உருவாக்குகிறது. இது புதிய பிரிவுகளில் முதலீடுகளை ஆதரிக்கிறது. இன்னொரு பிரபலமான ஐடிசி நிறுவனம் தனது சிகரெட் வணிகத்தின் லாபத்தை பயன்படுத்தி எஃப்எம்சிஜி போர்ட்ஃபோலியோவை உருவாக்குகிறது. அதே பாணியை ஏடபிள்யூஎல் கையில் எடுத்துள்ளது.
மேலும் சந்தையில் தனது இருப்பை அதிகரிக்க ஏடபிள்யூஎல் நிறுவனம் தனது சில்லறை விற்பனையை 18 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதன்மூலம் தற்போது 8.7 லட்சம் விற்பனை நிலையங்களை எட்டியுள்ளது. இந்த விரிவாக்கத்தில் சுமார் 55,000 கிராமப்புற பகுதிகளில் உள்ளன. மேலும் இந்த வணிக விரிவாக்கம் என்பது நிதியண்டு 2022ம் ஆண்டை ஒப்பிடும்போது 10 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
இருப்பினும் கூட நிறுவனத்தில் வலுவான வருவாய் வளர்ச்சி இருந்தபோதிலும், மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த காலாண்டில் நிகர லாபம் ரூ.238 கோடியாக குறைந்துள்ளது. விற்கப்பட்ட பொருட்களின் விலை (COGS) 25% உயர்ந்து, வருவாய் வளர்ச்சி விகிதத்தை தாண்டியது. இருப்பினும் கடந்த மூன்று மாதங்களில் மூலப்பொருள் விலை 10% மேல் குறைந்துள்ளது. இந்த குறைப்பு வரும் காலாண்டுகளின் நிதி செயல்திறனுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம் ஏடபிள்யூஎல் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூ.263 ஆக இருந்தது. இந்த நிறுவனம் தற்போது உணவு மற்றும் எப்எம்சிஜி வணிகத்தை விரிவுப்படுத்துவதும், சமையல் எண்ணெய் பிரிவில் இருந்து வருவாயை அதிகரிப்படுத்துவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications