கானல் நீரா காவிரி நீர்? தமிழ்நாட்டுக்கு கிடைத்துவிடுமா? கூடியது மேலாண்மை ஆணைய கூட்டம்!
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நீரில்லாமல் பயிர்கள் வாடிவரும் நிலையில் இன்றைய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிடும் என்பது எதிர்பார்ப்பு.
டெல்லில் காவிரி ஆணைய கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்துக்கு தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

அண்மையில் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில் 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. கர்நாடகாவில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டி.எம்.சி.-யில், 91 டி.எம்.சி அளவிற்கு மொத்த நீர் இருப்பு தற்போது உள்ளது. ஆனால் கர்நாடக அரசு 28.8 டி.எம்.சி அளவுக்கு பற்றாக்குறையாக தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது என சுட்டிக்காட்டி இருந்தார்.
இதனடிப்படையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய உரிய காவிரி நீரை வழங்க தமிழ்நாடு பிரதிநிதிகள் இன்றைய கூட்டத்தில் வலியுறுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications