காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? சோனியாவிற்கு பறந்த கடிதம்.. 23 மூத்த தலைவர்கள் கோரிக்கை
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று இவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
Recommended Video
காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது மூத்த தலைவர்கள் இடையே கடுமையான மோதலும், கருத்து வேறுபாடும் நிலவி வருகிறது. அதிலும் மாநிலங்களில் உயர் பதவிகளை வகிக்கும் தலைவர்கள் இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
தற்போது தேசிய அளவில் இது எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசிய தலைவர் யார் என்பது தொடர்பான தீவிரமான விவாதங்கள் எழுந்துள்ளது

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி சார்பாக கடந்த முறை நடந்த காரிய கமிட்டி கூட்டத்திலேயே இது தொடர்பான விவாதங்கள் எழுந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், புதிய தலைவரை உடனே தேர்வு செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அடுத்த வருடம் பல்வேறு மாநில தேர்தல்கள் வருகிறது. இந்த தேர்தல்களை எதிர்கொள்ள புதிய தலைவர்களை நியமிக்க வேண்டும், என்று மூத்த தலைவர்கள் சிலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

தலைவர் எப்படி
முறையாக பொறுப்பேற்ற திறமையான தலைவர் வேண்டும். இடைக்கால தலைவர் கிடையாது. களத்தில் இறங்கி பணிகளை செய்யும் நபர் ஒருவர்தான் எங்களுக்கு தலைவராக வேண்டும், என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகும் திட்டத்தில் இல்லை. சோனியா காந்தியும் முழு நேர தலைவராக வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

மன்மோகன்சிங்
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மன்மோகன் சிங் அல்லது ஏகே ஆண்டனியை தலைவராக தேர்வு செய்ய சில மூத்த உறுப்பினர்கள் முயல்வதாக கூறப்படுகிறது. இன்னும் சில தலைவர்கள் ப. சிதம்பரம், சசி தரூர் ஆகியோர் தலைவராக வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் தலைவராக வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

மீட்டிங்
இன்னொரு பக்கம் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் நிறைய குழப்பங்களும், மோதல்களும் நிலவி வருகிறது. இதிலும் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும். மாநில காங்கிரஸ் கட்சிக்கு உள்ளே தேர்தலை நடத்த வேண்டும். நாடு முழுக்க மாநில காங்கிரஸ் கட்சியில் தேர்தலை நடத்த வேண்டும். மாநில காங்கிரஸ் கட்சிக்குள் மாற்றங்களை, சீர் திருத்தங்களை செய்ய வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

என்ன கடிதம்
இதற்காக காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். ஆனால் இந்த தகவலை சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மறுத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட மீட்டிங் எதற்கும் திட்டமிடவில்லை, கடிதங்கள் எதுவும் பரிமாறப்படவில்லை என்று ரன்தீப் சிங் சுரஜ்வாலா உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மறுத்துள்ளனர்.
-
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications