கல்யாணத்துக்கு முன்.. வருங்கால கணவருடன் ரோலர் கோஸ்டரில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி.. சோகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் சில நாட்களில் திருமணத்தை வைத்து கொண்டு வருங்கால கணவருடன் பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்ற இளம்பெண் ரோலர் கோஸ்டரில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

டெல்லியில் உள்ள சாணக்யாபுரி பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா. இவர் தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் பிரிவில் மேனேஜராக இருக்கிறார். பிரியங்காவுக்கும், நிகில் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

roller Coaster

இவர்கள் 2 பேருக்கும் பிப்ரவரி மாதம் நிச்சயத்தார்த்தம் நடந்தது. விரைவில் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் பிரியங்கா தனது வருங்கால கணவர் நிகில் உடன் டெல்லி கபசேரா பார்டர் அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்றார்.

பொழுதுபோக்கு பூங்காவில் இருவரும் சேர்ந்து நேரம் செலவிட்டனர். அங்குள்ள தண்ணீர் கேம்களில் இருவரும் என்ஜாய் செய்தனர். அதன்பிறகு பிரியங்காவும், நிகிலும் ரோலர் கோஸ்டரில் பயணித்தனர். ரோலர் கோஸ்டர் உயரத்தில் பறந்தபோது பிரியங்கா அமர்ந்திருந்த இருக்கையின் ஸ்டேண்ட் திடீரென்று உடைந்தது.

இதனால் பிரியங்கா ரோலர் கோஸ்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வருங்கால கணவர் நிகில் கதறினார். உடனடியாக ரோலர் கோஸ்டர் நிறுத்தப்பட்டது. படுகாயமடைந்த பிரியங்கா மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பிரியங்காவின் உடலை பார்த்து அவரது வருங்கால கணவர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுபற்றி போலீஸ் தரப்பில், ‛ரோலர் கோஸ்டரில் பிரியங்கா அமர்ந்திருந்த இருக்கையின் ஸ்டேண்ட் திடீரென்று உடைந்தது. இதனால் அவர் கீழே விழுந்து இறந்தார்.

இதுபற்றி பிரியங்காவின் சகோதரர் மோகித் கூறுகையில், ‛‛பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் எனது சகோதரர் இறந்துவிட்டார். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. அதோடு மருத்துவமனைக்கும் தாமதமாக அனுப்பி உள்ளனர். ரோலர் கோஸ்டரில் பழுதாகி இருந்தால் அதனை சரிசெய்ய வேண்டும். அதைவிட்டு விட்டு மக்களின் உயிரோடு விளையாடி உள்ளனர். என் சகோதரியின் மரணத்துக்கு பொழுதுபோக்கு பூங்கா தான் பொறுப்பேற்க வேண்டும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+