இரு மாதங்களில் இல்லாத அளவு அதிகரிப்பு.. இந்தியாவில் ஒரே நாளில் 3,377 பேருக்கு கொரோனா
டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் இந்தியாவில் ஒரே நாளில் 60 பேர் பலியாகிவிட்டனர். மார்ச் 15 தேதிகளுக்கு பிறகு ஒரு நாள் கேஸ்களில் மிக அதிகமான எண்ணிக்கை இதுவாகும்.
இந்தியாவை விட்டு இந்த கொரோனா எப்போதுதான் ஒழியுமோ தெரியவில்லை. போவது போல் போய், உடனே யூடர்ன் அடித்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா நோய் வந்தவர்களுக்கு ஒரு வித பாதிப்பு என்றால், நோய் நொடி வராமலேயே மற்றவர்களுக்கு வேறு விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே இருந்த கொரோனாவை நினைத்து மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
ஆனால் அதற்குள் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவின் மொத்த பாதிப்பு 4,30,68,799 பேராகும். ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துவிட்டார்கள்.
இதன் மூலம் பலி எண்ணிக்கை 5,23,753 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,25,30,622 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் 17,801 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலியானோரின் கர்நாடகாவிலிருந்து 42 பேரும், கேரளாவிலிருந்து 14 பேரும் டெல்லி- மகாராஷ்டிராவில் தலா இருவரும் இறந்துள்ளனர்.
கொரோனாவிலிருந்து மீள்வோரின் விகிதம் 98.74 சதவீதமாக உள்ளது. அது போல் பாசிட்டிவிட்டி ரேட்டானது 0.71 சதவீதமாக உள்ளது. வாரந்திர பாசிட்டிவிட்டி ரேட்டானது 0.63 சதவீதமாகும். அது போல் இந்தியாவில் கொரோனாவால் பலியாவோரின் விகிதம் 1.22 சதவீதம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 165 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 90 பேருக்கு பாதிப்பு.
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி 30 லட்சத்தையும் செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும் செப்டம்பர் 16 ஆம் தேதி 50 லட்சத்தையும் தாண்டியது. செப்டம்பர் 28 ஆம் தேதி 60 லட்சத்தையும் அக்டோபர் 11 ஆம் தேதி 70 லட்சத்தையும் அக்டோபர் 29ஆம் தேதி 80 லட்சத்தையும் நவம்பர் 20 ஆம் தேதி 90 லட்சத்தையும் டிசம்பர் 19ஆம் தேதி 1 கோடியையும் தாண்டியது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications