டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து சர்ச்சை கருத்து.. 3 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்
டெல்லி: டெல்லி சட்டசபையில் மூன்று பாஜக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து டெல்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. டெல்லியில் தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், பாஜக எம்எல்ஏ அம்மாநில முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.

இன்று டெல்லி சட்டசபை கூடிய உடனே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி பாஜக எம்எல்ஏ தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை எதிர்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், பாஜக எம்.எல்.ஏ.க்கள் அனில் பாஜ்பாய், ஜிதேந்தர் மகாஜன் மற்றும் அஜய் மஹாவார் ஆகியோரை அமருமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார். இருப்பினும், அவர்கள் அமர் மறுத்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை வெளியேறும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும், அந்த மூன்று பாஜக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து டெல்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சபை நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, காலையில் சபை கூடியவுடன், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக எம்எல்ஏவின் கருத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், ஆம் ஆத்மி எம்எல்ஏ மொஹிந்தர் கோயல் பாஜக எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவருக்கு எதிராகக் கண்டன தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications