கரப்பான்பூச்சி கட்சிக்கு ஓட்டு போடுவீங்களா? இந்திய டூடே சர்வே ரிசல்ட்டில் கட்சிகளுக்கு வார்னிங்
டெல்லி: இந்தியா டுடே - சி வோட்டர் சார்பில் 6 மாதங்களுக்கு ஒருமுறை Mood Of the Nation Survey மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தேர்தலில் போட்டியிட்டால் ஓட்டு போடுவீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு 43 சதவீதம் பேர் வாக்கு செலுத்தமாட்டோம் என்றும், 33 சதவீதம் பேர் வாக்கு செலுத்துவோம் என்றும் கூறியுள்ளனர்.
இந்தியா டுடே - சி வோட்டர் சார்பில் 6 மாதங்களுக்கு ஒருமுறை Mood Of the Nation Survey ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 25ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 25,184 பேரிடம் நேரடியாக கருத்துகள் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி 'சி வோட்டர்' நிறுவனம் சார்பில் கடந்த 6 மாதத்தில் 91,795 பேரிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சர்வேயில் இன்று தேர்தல் நடந்தால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டால் வாக்கு செலுத்துவீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி அவரை ராஜினாமா செய்ய வைத்ததன் மூலம் இந்தியா முழுவதும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கவனம் பெற்றது. இதனால் தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போட்டியிட்டால் ஓட்டுபோடுவீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சர்வேயில் பங்கேற்றவர்களில் 43 சதவீதம் பேர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஓட்டளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளனர். அதேவேளையில் 33 சதவீதம் பேர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஓட்டளிப்போம் என்று ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும்24 சதவீதம் ஆதரவு தெரிவிப்பது அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி உறுதியான பதில்களை சொல்லவில்லை.
இருப்பினும் கூட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு 33 சதவீதம் பேர் ஓட்டளிப்போம் என்று கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது. அதேபோல் இந்த சர்வேயில் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அபிஜித் திப்கே பிரதமராக வேண்டும் என்று 1.3 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.


Click it and Unblock the Notifications
