‛வெற்றி’.. 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல்! எப்போது நடைமுறைக்கு வரும்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றம், சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்நிலையில்தான் இந்த புதிய மசோதா எப்போது நடைமுறைக்கு வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் சட்டசபை, நாடாளுமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 27 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாமல் கிடப்பில் இருந்தது. முன்னாள் பிரதமர்களான தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் இந்த மசோதாக்கள் நிறைவேற்ற முயன்றாலும் அது நடக்கவில்லை.

33% women reservation bill has approved by President Droupadi Murmu and When will implemement?

இந்நிலையில் தான் கடந்த 18 ம் தேதி முதல் 21ம் தேதி வரை 4 நாட்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடந்தது. இந்த கூட்டத்தொடரில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அனைத்து கட்சியினரும் ஒருசேர ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த 20ம் தேதி இந்த மசோதா மக்களவையில்(லோக்சபா) நிறைவேறியது. அதேபோல் மறுநாளான 21ம் தேதி மாநிலங்களவையில் (ராஜ்யசபா) நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தான் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதையடுத்து இது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 27 ஆண்டுக்கால போராட்டத்துக்கு பிறகு நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஒப்புதலுடன் சட்டமாகி உள்ளது.

இதற்கிடையே தான் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு எப்போது நடைமுறைக்கு வரும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதாவது மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என ஷரத்து உள்ளது. அதன்படி பார்த்தால் இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுத்து இருக்க வேண்டும்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக இது நடக்கவில்லை. இதனால் 2026ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணி முடிவடைந்த பிறகு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளது. இதனால் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா என்பது 2024 நாடாளுமன்ற தேர்தலில் நடைமுறைக்கு வராது.

அதோடு 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தான் அமலாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மேலும் இன்னும் ஒரு சிலரோ மசோதா சட்டமாக்கினாலும் கூட தொகுதி மறுவரையறையில் பல பிரச்சனைகள் எழலாம். இதனால் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் இன்னும் கூட அதிக காலம் எடுக்கலாம் என்கின்றனர்.

இதற்கிடையே தான் மசோதா மீதான விவாதத்தின்போது சோனியா காந்தி, கனிமொழி எம்பி உள்பல எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல பெண் எம்பிக்கள் இந்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கூறினார். ஆனால் இதனை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. இதற்கிடையே தான் தற்போது ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். தற்போது சட்டசபை, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது சட்டமாகி இருந்தாலும் கூட அந்த பயனை அவர்கள் பெற இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+