டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தினமும் 1 லட்சம் கொரோனா கேஸ்கள் வரலாம்.. 3ம் அலை இந்தியாவில் எப்படி இருக்கும்? ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவலின் போது தினமும் 1 லட்சம் கொரோனா கேஸ்கள் பதிவாக வாய்ப்புள்ளதாக ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர் சமீரான் பண்டா தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டு வரப்படுகிறது. வடமாநிலங்களில் அதிக அளவில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதனால் கொரோனா கேஸ்கள் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தளர்வுகள் கொண்டு வரப்பட்ட கேரளாவில் ஏற்கனவே கேஸ்கள் ஏறுமுகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. அங்கு தினசரி கேஸ்கள் தற்போது 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில்தான் மூன்றாம் அலை பரவல் குறித்து ஐசிஎம்ஆர் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கேரளாவில் யூ டர்ன் அடிக்கும் கொரோனா.. அதிகரிக்கும் கேஸ்கள்.. இந்தியாவில் புதிதாக 41283 பேர் பாதிப்பு கேரளாவில் யூ டர்ன் அடிக்கும் கொரோனா.. அதிகரிக்கும் கேஸ்கள்.. இந்தியாவில் புதிதாக 41283 பேர் பாதிப்பு

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர் மற்றும் மூத்த மருத்துவர் சமீரான் பண்டா இது குறித்து அளித்த பேட்டியில், இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் கொரோனா மூன்றாம் அலை ஏற்படும். ஆகஸ்ட் இறுதியில்தான் கேஸ்கள் உச்சத்தை தொடும். இந்தியாவில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.

அதிகம்

அதிகம்

இந்தியாவில் நிலைமை மோசமாகலாம். இந்த வைரஸ் இதற்கு மேலும் உருமாற்றம் அடையாமல் இருந்தால் ஒருவேளை கேஸ்கள் குறையலாம், பாதிப்பு, தாக்கம் குறையலாம். ஆனால் வைரஸ் ஒருவேளை மேலும் உருமாற்றம் அடைந்தால் நிலைமை மோசமாகும். அதிக அளவில் கேஸ்கள் வரும்.

மூன்றாம் அலை

மூன்றாம் அலை

மூன்றாம் அலை அளவிற்கு இரண்டாம் அலை மோசமாக இருக்காது. ஆனால் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள குறைவான வேக்சினேஷன், லாக்டவுன் தளர்வுகள் காரணமாக அதிக கேஸ்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது. இப்போது இருக்கும் சூழ்நிலை அதைத்தான் உணர்த்துகிறது.

Recommended Video

    WHO proposes fresh coronavirus mission to China | OneIndia Tamil
     சூழ்நிலை

    சூழ்நிலை

    முடிந்த அளவு மக்கள் வெளியே செல்வதை குறைக்க வேண்டும். முடிந்த அளவு மக்கள் பயணம் மேற்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். டெல்டா வகை கொரோனா பாதிப்பு இன்னும் இந்தியாவில் குறையவில்லை. அடுத்த 100-125 நாட்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று, மூத்த மருத்துவர் சமீரான் பண்டா தெரிவித்துள்ளார்.

    English summary
    3rd Wave may see a huge rise in India: 1 lakh people may affect per day says an ICMR scientist.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X