384 மருந்துகளாமே.. மத்திய அரசின் அதிரடி.. அத்தியாவசிய மருந்து லிஸ்ட்டில் புற்றுநோய் மருந்து சேர்ப்பு

தேசிய அத்தியாவசிய மருந்துகள் லிஸ்ட்டை மத்திய சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்துகள் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது... இதில், புற்று நோய்க்கான மருந்துகள் மற்றும் நோய்த் தொற்றை தடுக்கும் மருந்துகள் உட்பட புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன...!

நாட்டில் தரமான மருந்துகள், அனைத்து மட்டங்களிலும், நியாயமான விலையில் கிடைப்பதை அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் உறுதி செய்கிறது.

அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியிடப்படுகிறது..

 புது லிஸ்ட்

புது லிஸ்ட்

அதன்படி இந்தப் பட்டியலில் உள்ள மருந்துகளுக்கான விலையை மத்திய அரசே நிர்ணயிக்கும்... மேலும், இதனால் இவைகள் மிக குறைந்த விலையிலும் கிடைக்கும். முதன்முதலாக, இந்த பட்டியல் கடந்த 1996-ம் ஆண்டு வெளியிடப்பட்டது... அதன் பிறகு 2003, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டது... இப்போது 4-வது முறையாக திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. திருத்தப்பட்ட இந்த புதிய தேசிய பட்டியலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்...

 தேசிய பட்டியல்

தேசிய பட்டியல்

இந்த பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மன்சுக் மாண்டவியா பேசும்போது, "பிரதமர் மோடியின் 'அனைவருக்கும் மலிவான விலையில் மருந்து' என்ற தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்க இது வகை செய்கிறது.. செயல்திறன், முன்னுரிமை, தரம், விலை ஆகியவற்றின் அடிப்படையில் அத்தியாவசிய மருந்துகள் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.. இந்த அம்சங்களின் அடிப்படையில் மருந்துகள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே தேசிய பட்டியலின் நோக்கமாகும்" என்றார்.

 384 மெடிசன்

384 மெடிசன்

வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளன... அவை 27 சிகிச்சை பிரிவுகளுக்கு என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளன.. முந்தைய பட்டியலில் இருந்து 26 மருந்துகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.,.. அதற்கு பதிலாக 4 புற்றுநோய் சிகிச்சை மருந்துகள், சில தடுப்பூசிகள் என புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டு உள்ளன. அதாவது, ரானிடிடின், சுக்ரால்ஃபேட், ஒயிட் பெட்ரோலேட்டம், அடெனால், மெதில்டோபா போன்ற மருந்துகள் பட்டியலில் இடம்பெறவில்லை...

 லிஸ்ட்டில் இல்லை

லிஸ்ட்டில் இல்லை

சந்தையில் இவற்றைவிட நல்ல மருந்துகள் இருப்பதால் இவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல, 'ரேன்டாக், ஜென்டாக்' போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளும் நீக்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகள், பக்கவிளைவாக புற்றுநோயை உருவாக்குவதாக பல நாடுகளில் பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து பட்டியலில் இருந்து இவை நீக்கப்பட்டுள்ளன... மேலும், தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள மருந்துகள் எல்லாமே ஸ்கெட்யூல்ட் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+