மொத்தமா முடிஞ்சது.. பல்லை கடித்து நிற்கும் எடப்பாடி.. வெயிட்டிங்கில் ஓபிஎஸ்.. ஓ இதுதான் கிளைமேக்சா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் வாதம், ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து வாதம், எடப்பாடி பழனிசாமி வாதம், அதிமுகவின் பொது வாதம், அவைத்தலைவர் தமிழ் மகன் வாதம் என்று வரிசையாக கட்சியின் வாதங்கள் எல்லாம் முடிவிற்கு வந்துள்ளன. இனி வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. இந்த பொதுக்குழு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் மேல்முறையீடு வழக்கு ஆகும். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.

இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதோடு இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

வாதங்கள்

வாதங்கள்

இந்த பொதுக்குழு வழக்கில் வைக்கப்பட்ட வாதங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவர்களை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பளார் பொறுப்புகளை நீக்கும் வலிமை பொதுக்குழுவிற்கு இருப்பதாக அவர் வாதம் வைத்து இருக்கிறார். இந்த பொறுப்புகளை உருவாக்கியது பொதுக்குழு. அதனால் இந்த பதவிகளை நீக்குவதற்கும் பொதுக்குழுவிற்கு உரிமை உள்ளது. பொதுக்குழுவில் முடிவை ஏற்கும் நபரே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும். கட்சியின் விதி எண் 7 இதை கூறுகிறது. இந்த பொதுக்குழுவில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் நீக்கப்பட்டனர்.

எடப்பாடி வாதம்

எடப்பாடி வாதம்

பொதுக்குழுவில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.பெரும்பான்மை அடைப்படையில்தான் முடிவுகளை எடுக்க முடியும் என்று வாதம் வைத்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டதை பொதுக்குழு இன்னும் அங்கீகரிக்கவில்லை. பொதுக்குழுவிற்கே உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது. செயற்குழுவால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அந்த ஒப்புதல் இல்லை. இரட்டை தலைமையில் ஏற்பட்ட குழப்பத்தால்தான் கட்சியில் மீண்டும் ஒற்றை தலைமை தேவை என்ற நிலை ஏற்பட்டது. கட்சியின் நலனை கருதி ஒற்றை தலைமை கொண்டு வருவது எப்படி தவறாகும். கட்சியின் நலனுக்கு தேவை என்றால் அதைதானே செய்ய வேண்டும்.

தலைமை கழகம்

தலைமை கழகம்

தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை அவசர நேரத்தில் கூட்ட முடியும். அந்த அடிப்படையில்தான் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். இடைக்கால பொதுச்செயலாளர் தவறு என்றால்.. ஒருங்கிணைப்பாளர்.. இணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டும் எப்படி சரியாகும். பொதுச்செயலாளர் என்ற பதவி மட்டும் இருப்பதே தானே சரியாக இருக்கும். அதனால் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்க பொதுக்குழுவில் முடிவு செய்தோம். ஜூலை 11ம் தேதிக்கான பொதுக்குழு அறிவிப்பு ஜூன் 23ம் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இது ஓ பன்னீர்செல்வத்திற்கும் தெரியும். அவர்தான் பொதுக்குழுவிற்கு வராமல் கட்சி விதிகளை மீறினார். பொதுக்குழுவில் விதிகளை பின்பற்றும் நபர்களே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் என்று கட்சி விதி கூறுகிறது. அதை ஓ பன்னீர்செல்வம் மீறியதால் அவர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார், என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்துள்ளது, என்றார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்

ஓபிஎஸ் ஆதரவாளர்

ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்துவின் வழக்கறிஞர், அதன்பின் ஓபிஎஸ் வழக்கறிஞர் வைத்த பின்வருமாறு, அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவிக்குத்தான் அனைத்து பவர்களும் இருந்தன. ஆனால் 2017ல் இந்த பதவி நீக்கப்பட்டது. செயற்குழு மற்றும் பொதுக்குழு மூலம் இந்த பதவி நீக்கப்பட்டது. அதன்பின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதிமுகவில் தலைமை கழகம் முடிவுகளை எடுக்க முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் மேற்கொள்ள முடியும். அப்படி இருக்கும் போது என்னுடைய அனுமதி இன்றி முடிவுகளை எடுத்துள்ளனர். இது எப்படி நியாயம் ஆகும்.

பொதுக்குழு

பொதுக்குழு

பொதுக்குழு கூடியதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். பொதுக்குழு தவறான வழியில் கூட்டப்பட்டு உள்ளது. விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். ஆனால் இதை பற்றி உயர் நீதிமன்றம் கவனம் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் என்பது பொதுச்செயலாளரின் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட பதவி ஆகும். இந்த பதவி என்பது தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டுமே , பொதுச்செயலாளர் பதவிக்கு பின் நேரடியாக தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகள் ஆகும். இந்த பதவிகளுக்கு எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வானார்கள். இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இந்த உட்கட்சி தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.

கட்சி விதி

கட்சி விதி

அதிமுகவின் கட்சி விதி 42ன்படி உட்கட்சி முடிவுகளை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒன்றாக எடுக்க வேண்டும். அதாவது கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் படிவத்தில் இரண்டு பேரும் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். கட்சி நிதி சார்ந்த விவாகரங்களில் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். கட்சி கணக்கு வழக்குகளில் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். கட்சியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்றால் அதில் இவர்கள் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். இருவரும் ஒருமித்த குரலில் செயல்பட வேண்டும். ஒருங்கிணைப்பாளரை இவர்கள் கட்சியில் இருந்தே நீக்கி உள்ளனர். அந்த பதவிகளையும் நீக்கி உள்ளனர் என்று வைரமுத்து தரப்பு வாதம் வைத்தது.

அவைத்தலைவர், அதிமுக வாதம்

அவைத்தலைவர், அதிமுக வாதம்

அவைத்தலைவர் மற்றும் அதிமுக தரப்பில் வைக்கப்பட்ட பொது வாதத்தில், அதில், பொதுக்குழு உட்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு. பொதுக்குழு எடுக்கும் முடிவுகளை உறுப்பினர்கள் ஏற்க வேண்டும். பொதுக்குழு முடிவை ஏற்காத நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்படலாம். அதன் அடிப்படையில்தான் ஓ பன்னீர்செல்வம் தீர்மானம் இன்றி நீக்கப்பட்டார். பொதுக்குழு விதிப்படிதான் நடந்தது. ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்தோம். இந்த அழைப்பு ஓ பன்னீர்செல்வத்திற்கும் தெரியும். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் எல்லாம் நடக்க வில்லை. இதனால் தேர்தல் இல்லாமல் போட்டியின்றி வென்றனர். தேர்தலே கட்சியில் நடக்கவில்லை. 1.5 கோடி பேர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யவில்லை. ஓபிஎஸ் தனக்கு மட்டும் தொண்டர்கள் ஆதரவு உள்ளது என்கிறார் அது உண்மையா. அதற்கான ஆதாரம் இருக்கிறதா? அதற்கான ஆதாரம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா?, என்று கூறினார்.

வாதங்கள் நிறைவு

வாதங்கள் நிறைவு

இந்த வழக்கில் தற்போது வாதங்கள் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளன. இந்த நிலையில் எல்லோரும் எழுத்துபூர்வமான வாதங்களை வரும் வாரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அந்த வாதங்கள் திங்கள் கிழமை எடுத்துக்கொள்ளப்படும். இதன் அர்த்தம் வழக்கில் இந்த வாரம் தீர்ப்பு வராது. எழுத்துபூர்வமான வாதங்களை நீதிபதிகள் படிக்க வேண்டும். அப்படியென்றால் அடுத்த வாரமும் தீர்ப்பு வராது. எனவே வழக்கில் வாதங்கள் எல்லாம் படித்து தீர்ப்பு வர இன்னும் சில வாரங்கள் ஆகும். அதுவரை எடப்பாடி பல்லை கடித்துக்கொண்டு இருக்க வேண்டும். அதுவரை அவர் கட்சியில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடியாது.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

முக்கியமாக ஈரோடு கிழக்கு தேர்தல் நடந்தாலும் எடப்பாடி எந்த முடிவும் எடுக்க முடியாது. வேட்பாளர் வேட்புமனுவில் அவரால் கையெழுத்தும் போட முடியாத சிக்கல் ஏற்படும். இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமும் அதிமுகவிற்கு உள்ளே சென்று முடிவுகளை எடுக்க முடியாது. அவரும் காத்திருக்கவே வேண்டும். இந்த வழக்கில் எடப்பாடி ஆதரவு, ஓபிஎஸ் ஆதரவு, தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கட்டும், வழக்கை சிவில் கோர்ட்டில் அணுகுங்கள் என்று 4 விதமான கிளைமேக்ஸ்கள்.. அதாவது தீர்ப்புகள் வர வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+