சீட்டு கட்டுப்போல் சரிந்த 4 மாடி கட்டடம்.. இடிபாடுகளில் சிக்கியவர்களின் நிலை என்ன? அதிர்ந்த டெல்லி
டெல்லி: டெல்லி சீலம்பூர் பகுதியில் இன்று காலை 7 மணிக்கு திடீரென்று 4 மாடி கட்டடம் சீட்டுக்கட்டுப்போல் இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் மற்ற 6 பேரை மீட்பதற்கான பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
டெல்லி சீலம்பூரில் ஜனதா மஸ்தூர் காலனி உள்ளது. இங்கு 4 மாடி கட்டடம் இருந்தது. ஒரு தரைதளம் + 3 மாடிகள் அந்த கட்டடத்தில் இருந்தன. இந்நிலையில் தான் இன்று காலை 7 மணிக்கு திடீரென்று 4 மாடி கட்டடம் சீட்டுக்கட்டுப்போல் சரிந்து விழுந்தது.

அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு வீரர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் மீட்பு பணியை தொடங்கினர்.
முதற்கட்டமாக இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்னும் 6 பேர் வரை கட்டட இடிபாடுகளுக்கும் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் தீயணைப்பு துறையினருக்கு உதவி செய்து வருகின்றனர். தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் கட்டட இடிபாடுகளை அகற்றி மற்றவர்களை மீட்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தீயணைப்பு வீரர்கள் சார்பில், ‛‛ இந்த கட்டடத்தில் 8 முதல் 10 பேர் வசித்ததாக சொல்கின்றனர். இதில் 3 பெண்கள், 3 குழந்தைகளும் அடங்குவர். 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 6 பேர் வரை இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது'' என்றனர்.
இருப்பினும் இந்த கட்டடம் திடீரென்று இடிந்து விழுந்ததன் பின்னணி தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications