வரலாற்றில் முதல் முறை... ராஜ்யசபா துணைத் தலைவர் குழுவில் பிடி உஷா உட்பட 4 பெண் எம்பிக்கள் நியமனம்!
டெல்லி: வரலாற்றில் முதன் முறையாக ராஜ்யசபா துணைத் தலைவர் குழுவுக்கு 4 பெண் எம்.பி.க்களை நியமித்துள்ளார் ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர். இந்த குழுவில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பெண் உறுப்பினர்களும் முதல் முறையாக எம்பிக்களான உள்ளனர்.
இது தொடர்பான மத்திய அரசின் செய்திக் குறிப்பு: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு மறுசீரமைக்கப்பட்ட துணைத் தலைவர் குழுவில் மொத்தம் எட்டு பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் பாதி பேர் பெண்கள் ஆவார்கள். ராஜ்யசபா வரலாற்றில் துணைத் தலைவர் குழுவில் பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மற்றொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், ராஜ்யசபா இருக்கை முற்றிலும் டிஜிட்டல் மயமாகியுள்ளது. ராஜ்யசபா தலைவர் அவையின் அலுவல்கள், அவையில் வருகை, உறுப்பினர்கள் உரையாற்றும் விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் தொடர்பான விஷயங்களுக்கு மின்னணு பலகைகளைப் பயன்படுத்துவார்கள்.
துணைத் தலைவர் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெண் உறுப்பினர்களின் விவரங்கள் பின்வருமாறு.
பி.டி.உஷா: இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர் மற்றும் புகழ்பெற்ற தடகள வீரர் ஆவார். இவர் ஜூலை 2022 இல் ராஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டார். இவர் பாதுகாப்புக் குழு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு மற்றும் நெறிமுறைகள் குழு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.
எஸ்.பாங்னோன் கொன்யாக்: இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். ஏப்ரல், 2022 இல் நாகாலாந்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மற்றும் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பெண் ஆவார். இவர் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரக் குழு, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு,பெண்கள் அதிகாரமளித்தல் குழு, அவைக் குழு மற்றும் ஷில்லாங்கின் வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ளார்.
டாக்டர் ஃபௌசியா கான்: இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2020 ஏப்ரலில் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பெண்கள் அதிகாரமளித்தல் குழு, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகக் குழு, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.
சுலதா தியோ: இவர் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். இவர் ஜூலை 2022 இல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழில்துறை குழு, பெண்கள் அதிகாரமளித்தல் குழு, இலாப அலுவலகத்திற்கான கூட்டுக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (எம்.பி.எல்.ஏ.டி.எஸ்) மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.
மேற்குறிப்பிட்ட பெண் உறுப்பினர்களைத் தவிர, வி விஜயசாய் ரெட்டி, கன்ஷியாம் திவாரி, டாக்டர் எல் ஹனுமந்தய்யா மற்றும் சுகேந்து சேகர் ரே ஆகியோரும் துணைத் தலைவர்களின் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications