தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.. கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்துக்கான 40 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே நீண்டகாலமாக காவிரி தண்ணீரை பங்கிட்டு கொள்வதில் பிரச்சனை உள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நீண்டகாலமாக சட்டபோராட்டம் நடந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்துக்கு கர்நாடகா மாதம் மாதம் வழங்க வேண்டிய தண்ணீர் குறித்தும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இதில் பிரச்சனை வருவதை தவிர்க்கும்போது காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகலாம். இந்நிலையில் தான் டெல்லியில் இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டம் நடந்தது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தி்ன அலுவலகத்தில் அதன் தலைவர் எஸ்கே ஹால்தர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில், ‛‛உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடகா திறப்பது இல்லை. இப்போது தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீரை திறந்து விட உத்தரவிட வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து காவிர் நீர் மேலாண்மை ஆணையம் சார்பில், ‛‛தமிழகத்துக்கு ஜூன் மாதம் திறந்து விட வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீர் மற்றும் ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்'' என்று அதிரடியாக உத்தரவிட்டது. தற்போது கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு என்பது தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம்












Click it and Unblock the Notifications