ஆஹா.. அம்பானி வீட்டு கல்யாணம்.. ஆட்டம் போடும் அமெரிக்க அழகு தேவதை! சம்பளத்தை மட்டும் கேட்காதீங்க!
டெல்லி: உலக அளவில் பெரும் தொழிலதிபர்களில் ஒருவராக திகழும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்செண்டின் 2வது ப்ரீ-வெட்டிங் நிகழ்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகியான கேட்டி பெர்ரி கலந்து கொள்கிறார். அவருக்கு வழங்கப்பட இருக்கும் சம்பளம் தான் தற்போது இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபரின் மகளான ராதிகா மெர்சண்டுடன் திருமணம் நடக்க இருக்கிறது.

கடந்த மார்ச் மாதத்தில் ஜாம்நகரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற முதல் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பேசுபொருளானது. இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான், சல்மான்கான் தொடங்கி உலக அளவில் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் திரண்டனர்.
அம்பானி வீட்டு திருமணம்: மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோருக்கு ஆயிரக்கணக்கான உணவு வகைகள் பரிமாறப்பட்டது. குறிப்பாக அம்பானி குடும்பம் மிக எளிமையாக அனைவரோடும் பழகி அவர்களுக்கு உணவு பரிமாறியது இணையத்தில் பேசுபொருளானது. இந்த நிலையில் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சென்டின் இரண்டாவது ப்ரீ-வெட்டிக் கொண்டாட்டங்கள் இத்தாலியில் கேன்சில் 29ஆம் தேதி முதல் 20 ஜூன் 1ஆம் தேதியான இன்று வரை நடைபெற இருக்கிறது.
குவிந்த பிரபலங்கள்: இதற்காக ஒட்டுமொத்த அம்பானி குடும்பமும் இத்தாலியில் குவிந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் சல்மான்கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், ஜான்வி கபூர், கரீனா கபூர் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்களுக்கு சார்ட்டட் பிளைட் புக் செய்யப்பட்டு அவர்களும் அங்கு சென்றிருக்கின்றனர். மிகப்பெரிய சொகுசு கப்பலில் நான்கு நாள் கொண்டாட்டமாக இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் புகைப்படங்கள் வீடியோக்கள் வராதவாறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
கடலில் கொண்டாட்டங்கள்: இந்த நிலையில் ஆனந்த் அம்பானியின் ப்ரீ-திருமணம் குறித்த தகவல்களும் இணையத்தில் உலா வருகிறது. கடலில் தொடங்கிய இந்த ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் கடலிலேயே நடைபெறுகிறது. தொடர்ந்து சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் சென்று அதற்கு பிறகு பிரான்ஸ் நாட்டின் கேன்சில் நடைபெற இருக்கிறது. கேன்சில் நான்கு கோடி மதிப்புள்ள எஸ்டேட்டில் பார்ட்டி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் 800க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
கேட்டி பெர்ரி: 5 மணி நேரம் நடைபெற இருக்கும் இந்த கொண்டாட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகியான கேட்டி பெர்ரி விருந்தினர்களை உற்சாகப்படுத்த இருக்கிறார். அவரது சம்பளம் தான் தற்போது பேசு பொருளாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. 5 மணி நேர நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெர்ரிக்கு இந்திய மதிப்பில் சுமார் 45 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆச்சர்யம்: கடந்த ப்ரீ-வெட்டிங் நிகழ்ச்சியில் பாடகி ரிஹானாவுக்கு 12 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது கேட்டி பெர்ரி வழங்கப்பட்டிருக்கும் ஊதியம் உலக அளவில் பேசு பொருளாகி இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் பிரபலமான பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் குழுவின் நடன நிகழ்ச்சியும் பாப் சிங் நிகழ்ச்சியும் அம்பானி வீட்டு கல்யாணத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications