இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 47,638 பேருக்கு கொரோனா பாதிப்பு; 670 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 47,638 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 670 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு 4,90,31,012 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 12,39,608 ஆக உள்ளது. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,49,83,279.

அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 99,19,522 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,40,953 ஆகவும் உள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒருநாள் மட்டும் 1,18,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 47,638 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 24 மணிநேரத்தில் 670 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,11,724. இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,24,985.
கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. பிரேசிலில் 1,61,779 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 24 மணிநேரத்தில் 54,157 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இந்தியாவில் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 77,65,966. இந்தியாவில் தற்போதைய நிலையில் ஆக்டிவ் கேஸ்கள்- கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,20,773.












Click it and Unblock the Notifications