ரேஷன் கார்டுதாரர்களே.. ஒரு ஹேப்பி நியூஸ்.. நெருங்குது பண்டிகைகள்..இனிமேல் "இதுவும்" கிடைக்க போகுதாம்
டெல்லி: அடுத்தடுத்த பண்டிகைகள் விரைவில் வர உள்ள நிலையில், பொதுமக்களுக்கு கூடுதல் ரேஷன் பொருட்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் நம்பப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது, அதாவது, 2020ம் ஆண்டில், வடமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் பலர் இலவச ரேஷன் உணவு பொருட்களை கூட பெற முடியாமல் அவதி அடைந்தனர்...

இதனால் மத்திய அரசு "ஒரே நாடு, ஒரே ரேஷன்" திட்டத்தை அறிமுகப்படுத்தியது.. நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது..
எங்கும் வாங்கலாம்: இந்த ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலமாக இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் எங்கும் பொருட்கள் வாங்கலாம் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது அதன்படி, கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும், கிலோ அரிசி, 3 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. இதனால் எண்ணற்ற மக்கள் பயனடைந்தும் வருகிறார்கள்.
2020ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில்தான், பொதுமக்கள் அவதிப்படாத வண்ணம், மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது..
இலவச உணவு தானியங்கள்: அதன்பெயர் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டமாகும்.. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண திட்டத்தை அறிவிப்பதாக கூறினார். இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, மானிய விலை உணவு தானியத்துக்குமேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பல குடும்பங்கள் ரேஷன் கடை சலுகைகளையே நம்பி உள்ளதால், இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இந்த திட்டமானது, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது..
கூடுதல் ரேஷன்: நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதல் ரேஷன் கிடைக்க இருக்கிறது.
இந்நிலையில், இன்னொரு சர்ப்ரைஸை மத்திய அரசு தரப்போகிறது.. அதாவது பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 5 கிலோ கூடுதல் ரேஷன் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளதாம்.. இந்த கூடுதல் ரேஷன் சலுகை டிசம்பர் வரை நீட்டிக்க ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது..
தொடர் பண்டிகைகள்: அதுமட்டுமல்ல, இந்த திட்டம் மூலம் கடந்த ஆண்டு மட்டுமே, சுமார் 150 மெட்ரிக் டன் ரேஷன் அரசுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டதாக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்த முடிவு மூலமாக 15 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. விநாயகர் சதுர்த்தி நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், தீபாவளி பண்டிகை விரைவில் வரும்நிலையில், நாட்டு மக்களுக்கு இந்தஅறிவிப்பானது பெரும் மகிழ்ச்சியை தந்து வருகிறது
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications