5 மாநில சட்டமன்ற தேர்தல்.. "ரொம்ப முக்கியம்" ரெடியாகும் காங்கிரஸ்.. தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
டெல்லி: நடப்பு ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களை காங்கிரஸ் நியமித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்படும் என்பதால் காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளை தீவிரம் காட்டியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் கூட இல்லாத நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. லோக்சபா தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் காய் நகர்த்த தொடங்கியுள்ளன. குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திமுக உள்பட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடியுள்ளன.

இந்தக் கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு 'இந்தியா' (Indian National Democratic Inclusive Alliance - INDIA) எனப் பெயர் வைத்துள்ளன. இது ஒரு பக்கம் இருக்க லோக்சபா தேர்தலுக்கு முன்பாக நடப்பாண்டு இறுதியில் சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா என ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தல் நாடளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது.
வியூகம் அமைக்கும் கட்சிகள்: இதனால், ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கியமானதாக உள்ளது. ஏனெனில், மத்திய பிரதேசத்தில் பாஜகவும், ராஜஸ்தான், சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் உள்ளது. தெலுங்கனாவில் சந்திரசேகர்ராவின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான செமி ஃபைனல் போல இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் கருதப்படுகிறது. இதனால், தேர்தலை கணக்கில் கொண்டு பாஜக மற்றும் காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அண்மையில் பாஜக பாஜக உட்கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. தேர்தலை மனதில் வைத்து பாஜக முக்கிய பொறுப்புகளில் மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறது.
தேர்தல் பார்வையாளர்கள்: இந்த மாத துவக்கத்தில் 4 மாநிலங்களில் பாஜக தலைவரை கட்சி மேலிடம் மாற்றியது. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 13 பாஜக தேசிய துணைத் தலைவர்கள், 9 பாஜக பொதுச் செயலாளர்கள், 13 தேசிய செயலாளர்கள் புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் இன்று 5 மாநில சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் பார்வையாளர்களாக மதுசூதன் மிஸ்திரி, சசிகாந்த் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சச்சின் ராவ்: மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் பார்வையாளராக ரன் தீப் சுர்ஜேவாலா, சந்திரகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சத்தீஷ்கர் மாநில பேரவை தேர்தல் பார்வையாளராக பிரீதம் சிங், மீனாட்சி நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கான சட்டப்பேரவை தேர்தல் பார்வையாளராக தீபா தாஸ்முன்ஷி, ஸ்ரீவல்லா பிரசாத் நியமனம் செய்யபட்டுள்ளனர். மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் பார்வையாளராக சச்சின் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications