“கப்பு” கிடைக்குமா ”பிகிலு”? தெலுங்கானா உட்பட 5 மாநில தேர்தல்கள்- பாஜக இன்று ஆலோசனை- மோடி பங்கேற்பு!
டெல்லி: தெலுங்கானா உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான வியூகம் தொடர்பாக பாஜகவின் மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநிலங்களிலுமே பாஜகவின் வெற்றி என்பது மிகப் பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

தெலுங்கானாவில் பிஆர் எஸ், சத்தீஸ்கர்- ராஜஸ்தானில் காங்கிரஸ், மிசோரமில் மாநில கட்சி ஆட்சியில் உள்ளன. மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் அரசை கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்புகள் எதுவுமே பாஜகவுக்கு இதுவரை சாதகமாகவும் இல்லை. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த அரை இறுதி ஆட்டம், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அக்னி பரீட்சையாகத்தான் இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளும் கட்சியை உடைப்பது, கூட்டணிகள் சேர விடாமல் தடுப்பது என பல்வேறு வியூகங்களை பாஜக கையில் எடுத்துள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் உட்கட்சிப் பூசல் பெரும் தலைவலியாகவும் உருவெடுத்திருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல், காங்கிரஸின் பல மாநில தேர்தல்களுக்கு பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார். சத்தீஸ்கர் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளரான ஓம் மாத்தூர், பூபேஷ் பாகலை எதிர்கொள்ளக் கூடிய வலிமை உள்ளவர் இல்லை என்கிற குரல் பாஜகவுக்குள்ளே எதிரொலிக்கிறது. அதேபோல மத்திய பிரதேச மாநில பாஜகவிலும் உட்கட்சி பூசல் வெட்டு குத்து நிலையில் உள்ளது. இதனால் மத்திய அமைச்சர்களை மத்திய பிரதேச தேர்தல் களத்துக்கு பாஜக மேலிடம் அனுப்பி இருக்கிறது.
இப்பின்னணியில் டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்பாடுகிறது. மேலும் சத்தீஸ்கர், மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications