பெரிய நிம்மதி! ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைக்கு 18% வரி: இப்போதைக்கு இல்லை! ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 54-வது கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், மக்களுக்கு நிம்மதி கொடுக்கும் வகையிலான அறிவுப்புகளே வெளியாகின. அதாவது ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைக்கு இப்போதைக்கு 18% வரி இல்லை என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மத கரணங்களுக்காக இயக்கப்படும் ஹெலிகாப்டர்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பிறகு தொடர்ந்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், இந்தக் கூட்டம் கூடியது.

இதில், கோவா மற்றும் மேகாலயா மாநிலங்களின் துணை முதல்வர்களும், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் நிதியமைச்சர்களும், மத்திய மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக சில முடிவுகள் மக்களின் வரிச்சுமையை குறைக்கும் வகையில் இருக்கலாம் எனவும், அதேவேளையில் சில முடிவுகள் கூடுதல் வரிச்சுமையை ஏற்படுத்தலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதேபோன்று ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இன்றி முக்கியமாக ரூ.2 ஆயிரம் வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவிகிதம் வரி விதிக்கப்படுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த கூட்டத்தில் மக்களுக்கு நிம்மதி கொடுக்கும் வகையிலான அறிவுப்புகளே வெளியாகின. அதாவது ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைக்கு இப்போதைக்கு 18% வரி இல்லை என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தணைக்கு 18% வரிவிதிக்க வேண்டும் என்ற முன்மொழிவு குறித்து மேலும் விரிவாக ஆலோசிக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் பிட்பமண்ட் ( fitment) கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.
இதேபோல் மத கரணங்களுக்காக இயக்கப்படும் ஹெலிகாப்டர்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மருத்துவக் காப்பீடு தவணைக் கட்டணம் மீதான ஜிஎஸ்டியை குறைத்தல் அல்லது அந்த ஜிஎஸ்டியை செலுத்துவதில் இருந்து மூத்த குடிமக்கள் போன்றவா்களுக்கு விலக்களிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications